முன்னணி வீரர்களின் வருகையை எதிர்பார்த்துள்ள மே.தீவுகள்!

230

நியூசிலாந்துக்கு எதிராக மூன்று T20I போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் குழாம் நியூசிலாந்தை சென்றடைந்துள்ளது.

எனினும், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கீரன் பொல்லார்ட் உட்பட ஆறு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகின்றனர். 

கண்டி டஸ்கர்ஸ் அணியில் மஹரூப், குலசேகர

கீரன் பொல்லார்ட், பெபியன் எலன், ஷிம்ரொன் ஹெட்மையர், கீமொ போல், நிக்கோலஸ் பூரன், ஒசானே தோமஸ் ஆகியோருடன், T20I குழாத்தில் இணைக்கப்படாத மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் ஐ.பி.எல். தொடர் நிறைவடைந்த பின்னர் நியூசிலாந்துக்கு செல்லவுள்ளனர். 

இதில், ஆக்லாந்தில் நடைபெறவுள்ள முதல் T20I போட்டிக்கு குறைந்த இடைவெளி இருக்கும் பட்சத்திலேயே, மேற்குறித்த வீரர்கள் தங்களுடைய கொவிட்-19 தனிமைப்படுத்தலை நிறைவுசெய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த தனிமைப்படுத்தலானது, வீரர்களை பாதிக்காது என மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

“முதல் T20I போட்டிக்குள் (சற்று முன்னர்) எம்முடைய முன்னணி வீரர்கள் அவர்களுடைய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்வதற்கு கடினமாக இருக்கும். ஆனால், அவர்கள் மிகச்சிறந்த தொடர் ஒன்றில் விளையாடிய பின்னர், அணிக்கு திரும்புகின்றனர். எனவே, அந்த முக்கியமான விடயத்துடன் பார்க்கும் போது, நவம்பர் 27ம் திகதி முழுமையான குழாமாக இணைய முடியும் என நம்புகிறேன்” என பில் சிம்மன்ஸ் குறிப்பிட்டார்.

மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த மார்ச் மாதத்தில் இலங்கை அணிக்கு எதிரான T20I தொடரில் 2-0 என வெற்றிபெற்றிருந்தது. எனினும், குறித்த குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த டுவைன் பிராவோ உபாதை காரணமாக விலகியுள்ளதுடன், அன்ரே ரசலும் விலகியுள்ளார். இவ்வாறு, இவர்கள் விலகியுள்ள நிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணத் தொடருக்கான குழாத்தில் ஏனைய வீரர்களுக்கு வாய்ப்பை தக்கவைக்க இந்த தொடர் முக்கியமானதாக அமையும் எனவும் சிம்மன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Video – முன்னணி வீரர்களின் வெளியேறல் LPL ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

நாம் திட்டமிட்டப்படி தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த தொடரை பொருத்தவரை இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத வீரர்கள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் தங்களுடைய திறமையை முன்னிறுத்தி அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ண  குழாத்துக்குள் வாய்ப்பை தக்கவைக்க முடியும். நாம் முன்னணி சகலதுறை வீரர்கள் இருவரை இழந்துள்ளோம். 

அதேநேரம், குழாத்தில் இருக்கும் சில வீரர்கள் அணிக்குள் எவ்வாறு நுழைய வேண்டும் என புரிந்துக்கொள்ள வேண்டும். போட்டியில் இடம் கிடைக்காமல் வெளியில் இருக்கும் போது, வாய்ப்பு கிடைத்தால் நாம் எதனை செய்ய வேண்டும் என்பதை அறிந்துவைத்திருக்க வேண்டும்” என்றார்.

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இம்மாதம் 27ம் திகதி முதல் T20I போட்டியில் விளையாடவுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பர் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<