ஐசிசியின் புதிய வருமான பகிர்வுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு

Pakistan Cricket

113

ஐசிசியினால் முன்மொழியப்படவுள்ள புதிய வருமான பகிர்வு மாதிரிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முதல் நாடாக பகிரங்கமாக தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் ஐசிசி வெளியிடவுள்ள புதிய வருமான பகிர்வு மாதிரியொன்றினை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுவந்த நிலையில், குறிப்பிட்ட மாதிரியை ஏற்றுக்கொள்ள முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து குழாத்தில் இரு முக்கிய மாற்றங்கள்

புதிய வருமான பகிர்வு மாதிரியின்படி அடுத்த பருவகாலத்துக்கான ஐசிசியின் வருமானத்திலிருந்து 38.5 சதவீதத்தை இந்திய கிரிக்கெட் சபை பெற்றுக்கொள்வதுடன், இங்கிலாந்து 6.89 சதீவதம், அவுஸ்திரேலியா 6.25 சதவீதம், பாகிஸ்தான் 5.75 சதவீதம் என பங்குகளை பெற்றுக்கொள்ளும் என்பதுடன், ஏனைய கிரிக்கெட் சபைகள் 5 சதவீதத்துக்கும் குறைவான பங்குகளை பெற்றுக்கொள்ளும். இதில் இலங்கைக்கு 4.52 சதவீதம் மாத்திரமே வழங்கப்படவுள்ளது.

வணிக ரீதியாக இந்தியாவுக்கு மிகப்பெரிய வலுத்தன்மை உள்ளது. அதனால் இந்தியாவுக்கு அதிக பங்கு வழங்கவேண்டும் என்ற விடயத்தை நஜாம் சேதி ஏற்றுக்கொண்டாலும், இந்த புள்ளிவிபரங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டது என்ற பின்புளத்தை தெளிவுப்படுத்த வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த புள்ளிவிவரங்கள் எவ்வாறு வந்தன என்பதை ஐசிசி எமக்கு அறிவிக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடையவில்லை. ஜூன் மாதத்தில் இந்த புதிய வருமான பகிர்வுக்கான அனுமதி ஐசிசியினால் கோரப்படும்.

நாம் கேட்கும் விபரங்கள் எமக்கு வழங்கப்படாவிட்டால், புதிய வருமான பகிர்வு மாதிரியை நாம் அங்கீகரிக்கப் போவதில்லை. எனவே எமக்கான தெளிவுப்படுத்தல் கிடைக்குவரை நாம் இந்த புதிய வருமான பகிர்வு மாதிரியை அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

இதேவேளை இந்தியாவுக்கான வருமான பகிர்வு தொடர்பில் குறிப்பிட்ட இவர், கொள்கையின் அடிப்படையில் இந்தியா அதிக வருமானம் பெற வேண்டும். அதில் எந்த சந்தேகங்களும் இல்லை. ஆனால் இந்த புள்ளிவிபர பட்டியல் எவ்வாறு உருவாக்கப்பட்டது?” என்ற கேள்வியையும் நஜாம் சேதி எழுப்பியுள்ளார்.

புதிய வருமான பகிர்வு மாதிரியின் படி மொத்த வருமானமாக ஐசிசி 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<