இரண்டாவது டெஸ்டிற்கான இலங்கை குழாத்தில் மாற்றம்!

Pakistan tour of Sri Lanka 2022

2112

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் பெதும் நிஸ்ஸங்க மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் போது கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்திருந்த பெதும் நிஸ்ஸங்க, தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

முதல் ஓவரில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்து நியூசிலாந்து வீரர் சாதனை!

எனினும், பெதும் நிஸ்ஸங்க மீண்டும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணிக்குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதேநேரம் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் போது, அவருடைய வலதுகையிலுள்ள விரலொன்றில் உபாதை ஏற்பட்டிருந்தது. குறித்த இந்த உபாதை காரணமாக மஹீஷ் தீக்ஷன அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹீஷ் தீக்ஷனவுக்கு பதிலாக புதுமுக வலதுகை சுழல் பந்துவீச்சாளர் லக்ஷித மானசிங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதன்படி மானசிங்க பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெதும் நிஸ்ஸங்க மற்றும் லக்ஷித மானசிங்க ஆகியோர் இன்றைய தினம் (21) அணியுடன் இணைந்துக்கொள்வார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24ம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<