முதல் ஆஷஷ் டெஸ்டிலிருந்து வெளியேறும் பெட் கம்மின்ஸ்

Ashes 2025

32
Ashes 2025

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஆஷஷ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஷ் தொடர் அடுத்த மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

>>இந்திய தொடருக்கான ஆஸி. ஒருநாள், T20I குழாம்கள் அறிவிப்பு

இதில் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவர் உபாதை காரணமாக முதல் போட்டியில் விளையாடமாட்டார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெட் கம்மின்ஸின் முதுகுப்பகுதியில் ஏற்பட்டிருந்த உபாதை முழுமையாக குணமடைய காலதாமதமாகும் நிலையில் இவர் முதல் டெஸ்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

செப்டம்பர் மாத இறுதியில் பெட் கம்மின்ஸ் பயிற்சிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும், அவர் முழுமையாக குணமடைய இன்னும் காலம் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடரிலிருந்தும் இவர் வெளியேற்றப்பட்டிருந்தார்.

முதல் போட்டியிலிருந்து பெட் கம்மின்ஸ் நீக்கப்படும் நிலையில் இவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் முதல் ஆஷஷ் போட்டியில் தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<