இவ்வருடம் ஆரம்பமாகும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்

1226

முதலாவது ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வரும் ஒக்டோபரில் நடைபெறும் என்பதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது. இது தொடர்பில் கடந்த ஜனவரி மாதமே கிரிக்கெட் சபை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.  

ஐந்து அணிகள் கொண்ட தொடராக நடைபெறவிருக்கும் இந்த போட்டிகளில் ஆடுவதற்கு 40 சர்வதேச வீரர்கள் வரை தமது விருப்பத்தை வெளியிட்டிருப்பதாக ஆப்கான் கிரிக்கெட் சபை தலைவர் ஷுக்ருல்லாஹ் ஆதிப் மஷால் குறிப்பிட்டுள்ளார்.

நாம் உள்நாட்டில் ஏற்பாடு செய்யும் ஷ்பாகீசா கிரிக்கெட் லீக்கில் இருந்து தரம் உயர்த்தப்பட்டதாக இந்த லீக் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடைசி அணியாக உலகக் கிண்ணத்திற்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்

உலகக் கிண்ண தகுதிகாண்…

ஆப்கான் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த உதவும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எமக்கு உதவி மற்றும் ஊக்குவிப்பு வழங்கும் எமது அரசுக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். எமது இளைஞர்களுக்கு திறமையை வெளிக்காட்டவும் பாதகமான தாக்கங்களில் இருந்து வெளியேறவும் தளத்தை ஏற்படுத்த முடியும் என்று நாம் நம்புகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

எனினும் இந்த புதிய பிரீமியர் லீக் தொடர் ஷ்பாகீசா கிரிக்கெட் லீக்கிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அந்த தொடர் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்படவுள்ளது. இந்த லீக் ஆப்கானின் உள்நாட்டில் வளர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு தமது திறமையை வெளிக்காட்ட தளமாக அமையும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஷபிகுல்லாஹ் ஸ்டனிக்சாய் நம்புகிறார்.  

நாட்டில் அமைதி, அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்புச் செய்யும் ஒரு கருவியாக இது இருக்கும். நாட்டுக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு வெளியுலகை திறந்து விடுவதாகவும் இது அமையும். .பி.எல். T20 தொடரை உலகின் முதல் மூன்று லீக்குகளில் ஒன்றாக மாற்றுவதே சபையின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

இந்த .பி.எல். தொடர் உலகக் கிரிக்கெட்டுக்கு மேலும் தரமான வீரர்களை கொண்டுவரும் என்று ஆப்கான் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   

டெஸ்ட் தொடருக்காக அவுஸ்திரேலியா பயணிக்கும் இலங்கை அணி

இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த…

ரஷீத் கான், மொஹமது நபி, சாஹிர் கான் மற்றும் முஜீப் சத்ரான் போன்ற ஆப்கான் வீரர்கள் ஏற்கனவே .பி.எல். வட்டத்திற்குள் வந்திருக்கும் நிலையில் உலகின் மிகப்பெரிய போட்டிகளில் மேலும் ஆப்கான் வீரர்கள் பங்கேற்பார்கள் என்று சிம்மன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான லீக் போட்டிகளுக்கு நாட்டில் அதிக திறமை கொண்ட வீரர்கள் உள்ளனர். இதன்மூலம் மேலும் பல வீரர்கள் வெளிப்படுவார்கள்’என்று சிம்மன்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.      

ஆப்கான் பிரீமியர் லீக் T20 தொடர் ஐந்து அணிகள் கொண்ட 24 போட்டிகளுடன் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதோடு இதற்கு ஏழு மில்லியன் பணத்தை செலவிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  

வீடியோக்களைப் பார்வையிட