Home Tamil முதல் T20 போட்டியில் இலங்கை அணிக்கு படுதோல்வி

முதல் T20 போட்டியில் இலங்கை அணிக்கு படுதோல்வி

Pakistan tour of Sri Lanka 2026 

23
Pakistan tour of Sri Lanka 2026 

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் T20 தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

>>2026 T20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்து அணி அறிவிப்பு<<

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது இங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடுகின்றது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று (07) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் வீரர்கள் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தனர். இப்போட்டிக்கான இலங்கை குழாம் நீண்டகால இடைவெளியின் பின்னர் தனன்ஞய டி சில்வாவினை உள்வாங்கியிருந்தது.

தொடர்ந்து போட்டியில் துடுப்பாடிய இலங்கை வீரர்களுக்கு மோசமான ஆரம்பம் உருவாகியது. அணியின் மிக முக்கிய துடுப்பாட்ட நம்பிக்கையாக மாறுவார் என கணிக்கப்பட்டிருந்த தனன்ஞய டி சில்வா, பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் என அனைவரும் ஏமாற்றமான ஆட்டத்தோடு, ஓய்வறை சென்றனர். இதனால் ஒரு கட்டத்தில் இலங்கை 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் இந்த தருணத்தில் சற்று பொறுப்புடன் ஜனித் லியனகே ஆட இலங்கை அணியின் ஓட்டங்கள் அதிகரித்த போதும், போட்டியின் பிந்திய ஓவர்களிலும் தடுமாற்றம் ஏற்பட்டது.

இறுதியில் இலங்கை அணியானது 19.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டது. இலங்கைத் தரப்பில் அதிகபட்சமாக ஜனித் லியனகே 31 பந்துகளில் 40 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்றார் அஹ்மட் மற்றும் சல்மான் மிர்ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்ற, சதாப் கான் மற்றும் மொஹமட் வசீம் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 130 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணி, 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களுடன் போட்டியின் வெற்றி இலக்கை நெருங்கியது.

பாகிஸ்தானின் வெற்றியினை உறுதி செய்த சஹிப்சதா பர்ஹான் 36 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் பெற்றார். போட்டியின் ஆட்டநாயகனாக சதாப் கான் தெரிவானார். இப்போட்டியின் வெற்றியோடு பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result
Pakistan
129/4 (16.4)
Sri Lanka
128/11 (19.2)
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Mohammad Nawaz b Mohammad Wasim Jnr 12 11 2 0 109.09
Kamil Mishara  c Agha Salman b Salman Mirza 0 3 0 0 0.00
Kusal Mendis lbw b Shadab Khan 14 15 2 0 93.33
Dhananjaya de Silva c Usman Khan b Shadab Khan 10 10 1 0 100.00
Charith Asalanka c Usman Khan b Abrar Ahmed 18 15 0 1 120.00
Janith Liyanage  c Mohammad Nawaz b Abrar Ahmed 40 31 2 1 129.03
Wanindu Hasaranga c Fakhar Zaman b Abrar Ahmed 18 12 1 0 150.00
Dasun Shanaka c Faheem Ashraf b Salman Mirza 12 9 0 0 133.33
Dushmantha Chameera c Shadab Khan b Salman Mirza 0 3 0 0 0.00
Maheesh Theekshana c & b 1 3 0 0 33.33
Nuwan Thushara c & b 0 3 0 0 0.00
Extras 3 (b 0 , lb 3 , nb 0, w 0, pen 0)
Total 128/11 (19.2 Overs, RR: 6.62)
Bowling O M R W Econ
Salman Mirza 4 0 18 3 4.50
Mohammad Wasim Jnr 2.2 0 7 1 3.18
Faheem Ashraf 1 0 10 0 10.00
Shadab Khan 4 0 25 2 6.25
Mohammad Nawaz 4 0 40 0 10.00
Abrar Ahmed 4 0 25 3 6.25

Batsmen R B 4s 6s SR
Sahibzada Farhan  c Dasun Shanaka b Dushmantha Chameera 51 36 4 2 141.67
Saim Ayub b Maheesh Theekshana 24 18 3 1 133.33
Agha Salman c Pathum Nissanka b Wanindu Hasaranga 16 11 2 0 145.45
Fakhar Zaman st Kusal Mendis b Dhananjaya de Silva 5 10 0 0 50.00
Usman Khan not out 7 13 0 0 53.85
Shadab Khan not out 18 12 3 0 150.00
Extras 8 (b 0 , lb 5 , nb 0, w 3, pen 0)
Total 129/4 (16.4 Overs, RR: 7.74)
Bowling O M R W Econ
Nuwan Thushara 2 0 31 0 15.50
Maheesh Theekshana 4 0 31 1 7.75
Dushmantha Chameera 4 0 16 1 4.00
Wanindu Hasaranga 4 0 13 1 3.25
Dhananjaya de Silva 2 0 4 1 2.00
Charith Asalanka 0.4 0 7 0 17.50

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<