Home Tamil பிரபாத் ஜயசூரிய சுழலில் மிரட்ட சௌத் சகீல், அகா சல்மான் போராட்டம்

பிரபாத் ஜயசூரிய சுழலில் மிரட்ட சௌத் சகீல், அகா சல்மான் போராட்டம்

Pakistan tour of Sri Lanka 2023

238
Pakistan tour of Sri Lanka 2023 - 1st Test

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் நிலையில், பிரபாத் ஜயசூரியவின் திறமையான சுழல் பந்துவீச்சினை அடுத்து பாகிஸ்தான் தரப்பிற்காக அகா சல்மான் மற்றும் சௌத் சகீல் ஆகியோர் பொறுப்பாக செயற்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று (16) நிறைவுக்கு வந்த போது இலங்கை தமது முதல் இன்னிங்ஸில் 242 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.  களத்தில் ஆட்டமிழக்காது இருந்த தனன்ஞய டி சில்வா 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

>> இலங்கை அணியினை சரிவில் இருந்து மீட்ட மெதிவ்ஸ் – தனன்ஞய ஜோடி

இன்று போட்டியின் இரண்டாம் நாளில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்  துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த இலங்கை அணி விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்த போதும் தனன்ஞய டி சில்வா தன்னுடைய 10ஆவது டெஸ்ட் சதத்தோடு தனது தரப்பினை பலப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து தனன்ஞய டி சில்வாவின் விக்கெட் பறிபோக 95.2 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 312 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனன்ஞய டி சில்வா 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 122 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த விஷ்வ பெர்னாண்டோ 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் அகா சல்மான், ஷஹீன் அப்ரிடி மற்றும் அப்றார் அஹ்மட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே தமது ஆரம்பவீரர்களில் ஒருவரான இமாம்-உல்-ஹக்கின் விக்கெட்டினைப் பறிகொடுத்தது. கசுன் ராஜிதவின் பந்துவீச்சில் கமிந்து மெண்டிஸிடம் பிடிகொடுத்த இமாம்-உல்-ஹக் வெறும் ஒரு ஓட்டத்துடன் ஓய்வறை நடந்தார்.

இதன் பின்னர் இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளை வரை தொடர்ந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் பிரபாத் ஜயசூரியவின் சுழல் காரணமாக குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்திருந்தது. இதில் அணியின் தலைவரான ஷான் மசூத் மாத்திரம் பொறுப்புடன் ஆடி 39 ஓட்டங்கள் எடுத்திருக்க, பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் (13), அப்துல்லா சபீக் (19) மற்றும் சர்பராஸ் அஹ்மட் (17) ஆகியோர் மோசமான ஆட்டத்துடன் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணியானது ஒரு கட்டத்தில் 101 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

இந்த தருணத்தில் பாகிஸ்தான் அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அகா சல்மான் மற்றும் சௌத் சகீல் ஆகிய இருவரும் பொறுப்புடன் ஆடியதோடு அரைச்சதங்கள் பூர்த்தி செய்து சத இணைப்பாட்டத்தினையும் (120) பதிவு செய்தனர். இந்த இணைப்பாட்ட உதவியுடன் பாகிஸ்தான் அணியானது இரண்டாம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக நிறுத்தப்படும் போது 45 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

>> கிரிக்கெட்டில் ஆண் – பெண் இருபாலருக்கும் சமமான பரிசுத் தொகை

இலங்கையை விட 91 ஓட்டங்கள் பின்தங்கியிருக்கும் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் களத்தில் நிற்கும் சௌத் சகீல் தன்னுடைய தன்னுடைய 6ஆவது டெஸ்ட் அரைச்சதத்தோடு 69 ஓட்டங்கள் பெற்றிருந்ததோடு, அகா சல்மான் 61 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்க, கசுன் ராஜித மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
312/10 (95.2) & 279/10 (83.1)

Pakistan
461/10 (121.2) & 133/6 (32.5)

Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Sarfaraz Ahmed b Shaheen Shah Afridi 4 9 0 0 44.44
Dimuth Karunaratne c Safraz Ahmed b Shaheen Shah Afridi 29 43 6 0 67.44
Kusal Mendis c Agha Salman b Shaheen Shah Afridi 12 14 3 0 85.71
Angelo Mathews c Sarfaraz Ahmed b Abrar Ahmed 64 109 9 0 58.72
Dinesh Chandimal c Babar Azam b Naseem Shah 1 6 0 0 16.67
Dhananjaya de Silva c Shan Masood b Naseem Shah 122 214 12 3 57.01
Sadeera Samarawickrama c Imam-ul-Haq b Agha Salman 36 57 5 0 63.16
Ramesh Mendis c Babar Azam b Abrar Ahmed 5 40 1 0 12.50
Prabath Jayasuriya c Sarfaraz Ahmed b Naseem Shah 4 29 0 0 13.79
Kasun Rajitha c Abdullah Shafique b Abrar Ahmed 8 24 1 0 33.33
Vishwa Fernando not out 21 28 2 1 75.00


Extras 6 (b 4 , lb 1 , nb 1, w 0, pen 0)
Total 312/10 (95.2 Overs, RR: 3.27)
Fall of Wickets 1-6 (2.2) Nishan Madushka, 2-22 (6.4) Kusal Mendis, 3-53 (14.2) Dimuth Karunaratne, 4-54 (15.2) Dinesh Chandimal, 5-185 (48.1) Angelo Mathews, 6-242 (65.4) Sadeera Samarawickrama, 7-257 (76.6) Ramesh Mendis, 8-282 (85.6) Prabath Jayasuriya, 9-283 (87.1) Dhananjaya de Silva, 10-312 (95.2) Kasun Rajitha,

Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 24 3 86 3 3.58
Naseem Shah 22 2 90 3 4.09
Abrar Ahmed 31.2 9 68 3 2.18
Agha Salman 5 1 18 1 3.60
Nauman Ali 13 2 45 0 3.46
Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 19 28 3 0 67.86
Imam-ul-Haq c Kamil Mishara  b Kasun Rajitha 1 10 0 0 10.00
Shan Masood lbw b Ramesh Mendis 39 30 5 1 130.00
Babar Azam c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya 13 16 2 0 81.25
Saud Shakeel not out 208 361 19 0 57.62
Sarfaraz Ahmed lbw b Prabath Jayasuriya 17 15 3 0 113.33
Agha Salman st Sadeera Samarawickrama b Ramesh Mendis 83 113 9 1 73.45
Nauman Ali lbw b Ramesh Mendis 25 57 4 0 43.86
Shaheen Shah Afridi lbw b Vishwa Fernando 9 14 2 0 64.29
Naseem Shah b Ramesh Mendis 6 78 1 0 7.69
Abrar Ahmed c Angelo Mathews b Ramesh Mendis 10 12 1 1 83.33


Extras 31 (b 9 , lb 8 , nb 6, w 8, pen 0)
Total 461/10 (121.2 Overs, RR: 3.8)
Fall of Wickets 1-3 (1.6) Imam-ul-Haq, 2-47 (10.2) Abdullah Shafique, 3-67 (11.6) Shan Masood, 4-73 (14.4) Babar Azam, 5-101 (20.2) Sarfaraz Ahmed, 6-278 (55.6) Agha Salman, 7-330 (73.2) Nauman Ali, 8-346 (76.3) Shaheen Shah Afridi, 9-440 (116.5) Naseem Shah, 10-461 (121.2) Abrar Ahmed,

Bowling O M R W Econ
Vishwa Fernando 18 1 69 1 3.83
Kasun Rajitha 19 1 77 1 4.05
Prabath Jayasuriya 35 3 145 3 4.14
Ramesh Mendis 42.2 2 136 5 3.22
Dhananjaya de Silva 7 1 17 0 2.43
Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Sarfaraz Ahmed b Nauman Ali 52 115 7 1 45.22
Dimuth Karunaratne c Agha Salman b Abrar Ahmed 20 27 4 0 74.07
Kusal Mendis lbw b Nauman Ali 18 45 2 0 40.00
Angelo Mathews c Babar Azam b Nauman Ali 7 21 1 0 33.33
Dinesh Chandimal c Imam-ul-Haq b Agha Salman 28 64 3 0 43.75
Dhananjaya de Silva c Sarfaraz Ahmed b Shaheen Shah Afridi 82 118 10 2 69.49
Sadeera Samarawickrama c Abdullah Shafique b Agha Salman 11 11 2 0 100.00
Ramesh Mendis lbw b Abrar Ahmed 42 79 3 1 53.16
Prabath Jayasuriya c Shan Masood b Shaheen Shah Afridi 10 11 2 0 90.91
Vishwa Fernando not out 0 6 0 0 0.00
Kasun Rajitha c Shan Masood b Abrar Ahmed 5 3 0 0 166.67


Extras 4 (b 0 , lb 1 , nb 1, w 2, pen 0)
Total 279/10 (83.1 Overs, RR: 3.35)
Fall of Wickets 1-42 (11.1) Dimuth Karunaratne, 2-79 (24.6) Kusal Mendis, 3-91 (32.1) Angelo Mathews, 4-99 (36.6) Nishan Madushka, 5-159 (53.1) Dinesh Chandimal, 6-175 (55.5) Sadeera Samarawickrama, 7-251 (78.1) Ramesh Mendis, 8-269 (80.6) Dhananjaya de Silva, 9-274 (82.3) Prabath Jayasuriya, 10-279 (83.1) Kasun Rajitha,

Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 13 0 64 2 4.92
Naseem Shah 12 2 32 0 2.67
Agha Salman 9 0 39 2 4.33
Abrar Ahmed 24.1 5 68 3 2.82
Nauman Ali 25 5 75 3 3.00


Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya 8 18 1 0 44.44
Imam-ul-Haq not out 50 84 4 0 59.52
Shan Masood c Nishan Madushka b Prabath Jayasuriya 7 11 1 0 63.64
Nauman Ali run out (Ramesh Mendis) 0 7 0 0 0.00
Babar Azam lbw b Prabath Jayasuriya 24 28 5 0 85.71
Saud Shakeel c Sadeera Samarawickrama b Ramesh Mendis 30 38 6 0 78.95
Sarfaraz Ahmed c Kusal Mendis b Prabath Jayasuriya 1 10 0 0 10.00
Agha Salman not out 6 1 0 1 600.00


Extras 7 (b 4 , lb 3 , nb 0, w 0, pen 0)
Total 133/6 (32.5 Overs, RR: 4.05)
Fall of Wickets 1-16 (6.4) Abdullah Shafique, 2-36 (10.4) Shan Masood, 3-38 (12.6) Nauman Ali, 4-79 (20.3) Babar Azam, 5-122 (29.4) Saud Shakeel, 6-127 (32.4) Sarfaraz Ahmed,

Bowling O M R W Econ
Vishwa Fernando 2 1 6 0 3.00
Ramesh Mendis 14 1 62 1 4.43
Prabath Jayasuriya 14.5 0 56 4 3.86
Dhananjaya de Silva 2 1 2 0 1.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<