Home Tamil பெதும் நிஸ்ஸங்க அசத்தல்; பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு முதல் வெற்றி

பெதும் நிஸ்ஸங்க அசத்தல்; பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு முதல் வெற்றி

Sri Lanka tour of Pakistan 2025

15
Sri Lanka tour of Pakistan 2025

ராவல்பிண்டியில் இடம்பெற்று முடிந்த இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முத்தரப்பு T20I தொடரின் போட்டியில் இலங்கை 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. 

>>T20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் அயர்லாந்துடன் மோதும் இலங்கை<<

அத்துடன் இந்த வெற்றியுடன் இலங்கை அணியானது பாகிஸ்தான் முத்தரப்பு T20I தொடரில் தமது இறுதிப் போட்டி வாய்ப்பினை உயிர்ப்புடன் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணித் தலைவர் சிக்கந்தர் ரஷா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் சுழல்பந்துவீச்சு மூலம் அழுத்தம் ஏற்படுத்தினர்.

தொடர்ந்து ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்கள் பெற்றது. ஜிம்பாப்வே துடுப்பாட்டத்தில் பிரையன் பென்னட் சிறந்த ஆரம்பத்துடன் 26 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் சிக்கந்தர் ரஷா மற்றும் ரயான் பர்ல் ஆகியோர் தலா 37 ஓட்டங்கள் பெற்று தமது பங்களிப்பினை வழங்கினர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர்களான மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

பின்னர் 147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க மிகச் சிறப்பான தொடக்கத்தை வழங்கினார். அவர் ஆரம்பம் முதல் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இலங்கை அணி தனது முதல் விக்கெட்டை 59 ஓட்டங்களுக்கு இழந்தபோதும், களத்தில் நின்ற பதும் நிஸ்ஸங்கவுடன் குசல் மெண்டிஸ் இணைந்தபோது, ஆட்டத்தின் முழு கட்டுப்பாட்டையும் இலங்கை அணி தமது கைகளில் எடுத்தது.

>>பெப்ரவரி 15 – இந்தியா – பாகிஸ்தான் மோதல் கொழும்பில்?<<

தொடர்ந்து இலங்கை அணி 16.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்து, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலக்கை அடைந்து அபார வெற்றியைப் பதிவு செய்தது.

பதும் நிஸ்ஸங்க, தனது சதத்தை அடைய 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். அவர் 58 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்கள் குவித்தார். மறுமுனையில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்கள் எடுத்தார்.

பெதும் நிஸ்ஸங்க போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அணி இந்த முத்தரப்பு தொடரில் தனது அடுத்த போட்டியில் நவம்பர் 27ஆம் திகதி பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மாத்திரமே இலங்கை அணி முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

Result
Sri Lanka
148/1 (16.2)
Zimbabwe
146/5 (20)
Batsmen R B 4s 6s SR
Brian Bennett hit-wicket b Wanindu Hasaranga 34 26 4 1 130.77
Tadiwanashe Marumani b Maheesh Theekshana 4 3 1 0 133.33
Dion Myers b Maheesh Theekshana 6 7 1 0 85.71
Brendan Taylor b Dasun Shanaka 14 16 2 0 87.50
Sikandar Raza c Kusal Perera b Wanindu Hasaranga 37 29 5 1 127.59
Ryan Burl not out 37 26 5 1 142.31
Tashinga Musekiwa not out 6 14 0 0 42.86
Extras 8 (b 1 , lb 4 , nb 1, w 2, pen 0)
Total 146/5 (20 Overs, RR: 7.3)
Bowling O M R W Econ
Maheesh Theekshana 4 0 23 2 5.75
Dasun Shanaka 4 0 36 1 9.00
Dushmantha Chameera 4 0 26 0 6.50
Wanindu Hasaranga 4 0 23 2 5.75
Eshan Malinga 4 0 33 0 8.25

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka not out 98 58 11 4 168.97
Kamil Mishara  c Wellington Masakadza b Brad Evans 12 15 2 0 80.00
Kusal Mendis not out 25 25 1 1 100.00
Extras 13 (b 1 , lb 2 , nb 0, w 10, pen 0)
Total 148/1 (16.2 Overs, RR: 9.06)
Bowling O M R W Econ
Richard Ngarava 3.2 0 44 0 13.75
Tinotenda Maposa 2 0 29 0 14.50
Brad Evans 4 0 36 1 9.00
Sikandar Raza 4 0 17 0 4.25
Wellington Masakadza 3 0 19 0 6.33

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<