ஜிம்பாப்வே – நெதர்லாந்து இருதரப்பு தொடருக்கான குழாம்கள் அறிவிப்பு

149
Image - KNCB

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியானது நெதர்லாந்துக்கு குறுகிய கால சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இருதரப்பு கிரிக்கெட் தொடருக்கான இரு அணிகளினதும் குழாம்கள் அந்நாட்டு கிரிக்கெட் சபைகளினால் நேற்று (13) அறிவிக்கப்பட்டது.

கிரிக்கெட் உலகின் திருவிழாவான .சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. இம்முறை நடைபெறுகின்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பத்து அணிகள் மாத்திரம் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறாத அணிகளான ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் இருதரப்பு தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளன.

சங்கக்காரவின் சாதனையை முறியடித்த கிரிஸ் கெயில்

இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார்…

எதிர்வரும் புதன்கிழமை (19) ஆரம்பமாவுள்ள இவ்விருதரப்பு தொடரில் இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டி20 சர்வதேச போட்டிகள் கொண்ட தொடர் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஜிம்பாப்வே அணியின் ஒருநாள், டி20 குழாம்

ஹமில்டென் மஸகட்ஸா மற்றும் பிரென்டன் டைலர் ஆகிய ஜிம்பாப்வே அணியின் அனுபவ வீரர்கள் உபாதையிலிருந்து மீண்டு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். மேலும், மஸகட்ஸாவிடம் அணியின் தலைமைத்துவம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

இதுவரை 22 தர போட்டிகளில் விளையாடியுள்ள 23 வயதுடைய இடது கை சுழற் பந்துவீச்சாளரான ஐன்ஸ்லி என்டுலோவு முதல் முறையாக சர்வதேச அறிமுகம் பெறும் அடிப்படையில் குழாமிற்கு அறிமுக வீரராக அழைக்கப்பட்டுள்ளார்.  

அண்மையில் நிறைவுக்கு வந்திருந்த ஐக்கிய அரபு இராச்சிய அணியுடனான தொடரின் போது ஜிம்பாப்வே அணியில் விளையாடியிருந்த ஐந்து வீரர்கள் குழாமிலிருந்து நீக்கப்பட்டு, மேலும் ஐந்து வீரர்கள் புதிதாக குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

விக்கெட் காப்பாளரான ரெகிஸ் சகப்வா, துடுப்பாட்ட வீரர்களான டிமைகென் மருமா, பெரியன் ச்சரி மற்றும் சகலதுறை வீரர்களான பிரென்டன் மவுடா மற்றும் டொனி முன்யொங்கா ஆகியோரே குழாமிலிருந்து இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.

ஜிம்பாப்வே அணியின் 16 பேர் கொண்ட குழாம்

ஹமில்டென் மஸகட்ஸா (அணித் தலைவர்), பிரென்டன் டைலர், பீட்டர் மூர், சொலொமென் மிர், சேன் வில்லியம்ஸ், சிகன்டர் ராஸா, டொனால்ட் திரிபானோ, கெய்ல் ஜர்விஸ், டென்டாய் சதாரா, கிறிஸ் முப்வோ, கிரோக் ஏர்வின், ஐன்ஸ்லி என்டுலோவு, எல்டன் சிக்கம்புரா, ரிச்மொன்ட் முதும்பாமி, டினாசி கமுன்ஹூகம்வீ, ரியன் பர்ல்   

நெதர்லாந்து அணியின் ஒருநாள், டி20 குழாம்

ஜிம்பாப்வே அணியுடனான இரு தொடர்களுக்குமாக சேர்த்து நெதர்லாந்து அணியானது 13 பேர் கொண்ட குழாமினை வெளியிட்டுள்ளது. அதன் பிரகாரம் 2014ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்று, பின்னர் எவ்வித ஒருநாள் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த வேகப் பந்துவீச்சாளரான விவியன் கிங்மா ஐந்து வருடங்களின் பின்னர் சர்வதேச போட்டிகளுக்காக அணிக்கு திரும்பியுள்ளார். மேலும், இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள 19 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரரான பெஸ் டி லீடி குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.  

பாகிஸ்தானை எதிர்கொள்வதில் அச்சமடையும் விராத் கோஹ்லி

பாகிஸ்தான் அணிக்கு எதிராக எதிர்வரும்…

உள்ளூர் தொடர்களில் விளையாடிய அதிக அனுபவம் கொண்ட 34 வயதுடைய சகலதுறை வீரரான ரொலொப் வென் டர் மேவர் ஒன்பது வருடங்களுக்கு பின்னர் தேசிய அணிக்கு திரும்பியுள்ளார்.

அத்துடன், தென்னாபிரிக்காவை பிறப்பிடமாக கொண்ட 22 வயதுடைய வீரரான பிரென்டொன் க்ளோவர் மற்றும் 22 வயதுடைய சாக்கிப் சுல்பிகார் ஆகிய வீரர்கள் நெதர்லாந்து ஒருநாள் அணிக்கு அறிமுக வீரர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்து அணியின் 13 பேர் கொண்ட குழாம்

பீட்டர் சீலர் (அணித்தலைவர்), வெஸ்லி பிரேஸி, பென் கூப்பர், பெஸ் டி லீடி, ஸ்கொட் எட்வார்ஸ்ட், பிரென்டொன் க்ளோவர், விவியன் கிங்மா, ப்ரெட் கிளாஸன், மெக்ஸ் ஓடோவ்ட், ரொலொப் வென் டர் மேவர், போல் வென் மெகீரன், தொபியஸ் வைஸீ, சாக்கிப் சுல்பிகார்

இருதரப்பு தொடர் அட்டவணை

  • ஜூன்19  – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிடெவென்டர்
  • ஜூன் 21 – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டிடெவென்டர்
  • ஜூன் 23 – முதலாவது டி20 சர்வதேச போட்டிரொட்டெர்டாம்
  • ஜூன் 25 – இரண்டாவது டி20 சர்வதேச போட்டிரொட்டெர்டாம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<