பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு சுகயீனம்!

Cricket World Cup 2023

682

பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி உட்பட சில வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அணியின் வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, தற்போது வீரர்களின் உடல்நிலை சரியாகி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை!

இதுதொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், எமது அணியின் சில வீரர்களுக்கு சுகயீனம் ஏற்பட்டிருந்ததுடன், இதில் சிலர் முழுமையாக குணமடைந்துள்ளனர். தற்போது குணமடைந்து வரும் சில வீரர்கள் வைத்தியர்களின் கண்காணிப்பில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான சஹீன் ஷா அப்ரிடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அப்துல்லாஹ் சபீக், மொஹமட் ரிஸ்வான், சல்மான் ஆகா அலி, மொஹமட் ஹாரிஸ் மற்றும் ஷமான் கான் ஆகியோரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வீரர்களுக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ள போதும் இது வைரஸ் தொற்று மற்றும் நோய் இல்லை என பாகிஸ்தான் அணியின் வைத்தியர்கள் உறுதிசெய்துள்ளனர். 

இதேவேளை சுகயீனத்துக்கு ஆளாகியுள்ள வீரர்கள் அடுத்து நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் முழுமையாக குணமடைந்துவிடுவர் என பாகிஸ்தான் அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<