பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் அணி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.
தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவுசெய்தது.
தனிஷ்க குணதிலக்கவின் தடை நீக்கம்
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு மொஹமட் சமாஸ் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். நிதானமாக ஆடிய இவர் 89 பந்துகளில் 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவரைத் தொடர்ந்து நவோத் பரணவிதான 66 ஓட்டங்களையும், அணித்தலைவர் அஹான் விக்ரமசிங்க ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 68 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிபொன் மொண்டல் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இலங்கை அணி 48.1 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 245/8 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்ட காரணத்தால் டக்வர்த் லூவிஸ் முறைப்படி பங்களாதேஷ் அணிக்கு 47 ஓவர்களில் 251 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு, ஆரம்பம் முதல் இலங்கை வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாற்றத்தை கொடுத்தனர்.
குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களான எசான் மாலிங்க (2 விக்கெட்டுகள்) மற்றும் சாமிக்க குணசேகர (1 விக்கெட்) ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுகளை சாய்த்தனர். இவர்களின் இந்த ஆரம்பத்தை தொடர்ந்து சுழல் பந்துவீச்சாளரான அஷைன் டேனியல் அற்புதமான பந்துவீச்சினை வெளிப்படுத்தினார்.
இவர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை சாய்க்க மறுமுனையில் எசான் மாலிங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர்கள் இருவரின் பந்தவீச்சின் காரணமாக பங்களாதேஷ் அணி 38 ஓவர்கள் நிறைவில் 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அஷைன் டேனியல் மற்றும் எசான் டேனியலை அடுத்து விஜயகாந்த் வியாஸ்காந்த் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<