பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB), அடுத்த மாதம் தமது சொந்த மண்ணில் நடைபெறவிருக்கும் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் பங்கெடுக்கும் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் T20I அணிக்குழாம்களை அறிவித்துள்ளது.
>>யூரோ ஃபோர்மியுலா பகிரங்க சம்பியன்ஷிப்பில் ‘ரூக்கீ’ விருது வென்று யெவான் டேவிட் சாதனை<<
அதன்படி வெளியிடப்பட்டிருக்கும் பாகிஸ்தான் T20I அணியில் பாபர் அசாம் மற்றும் நசீம் ஷா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.சி.சி இன் T20I உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகுவதனை கருத்திற் கொண்டே பாகிஸ்தான் அணி முன்னாள் தலைவர் பாபர் அசாம் மற்றும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா ஆகியோரினை இணைத்ததாக குறிப்பிட்டிருக்கின்றது.
அதேநேரம் ஒருநாள் அணித்தலைவராக பதவி நீக்கம் செய்யப்பட்ட, மொஹமட் ரிஸ்வான் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் தொடர்ந்தும் இடம்பெற்றிருக்க, விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கான் மற்றும் சுழல்பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் ஆகியோர் பாகிஸ்தான் T20I அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.
பாகிஸ்தான் அணி, முதலில் தென்னாபிரிக்காவை எதிர்கொள்கின்றது. பாகிஸ்தான் – தென்னாபிரிக்க தொடர் மூன்று T20I போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்டதாக காணப்படுகின்றது. அதேநேரம் தென்னாபிரிக்க – பாகிஸ்தான் தொடர் ஒக்டோபர் 28 ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>>2026 T20 உலகக் கிண்ணத் தொடருக்காக LPL 2025 ஒத்திவைப்பு<<
இதனையடுத்து நவம்பர் 11 முதல் பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகுகின்றது.
அதன் பின்னர், ராவல்பிண்டி மற்றும் லாகூரில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு T20I தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பாகிஸ்தான் T20 குழாம்: சல்மான் அலி அகா (தலைவர்), அப்துல் ஸமட், அப்றார் அஹமட், பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், ஹசன் நவாஸ், மொஹமட் நவாஸ், மொஹமட் வசிம் ஜூனியர், மொஹமட் சல்மான் மிர்சா, நசீம் ஷா, சஹீப்சதா பர்ஹான், சயிம் அய்யூப், ஷஹீன் அப்ரிடி, உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.
பாகிஸ்தான் ஒருநாள் குழாம்: ஷஹீன் அப்ரிடி (தலைவர்), அப்றார் அஹமட், பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பைசல் அக்ரம், பக்கர் சமான், ஹரிஸ் ரவுப், ஹசீபுல்லா, ஹசன் நவாஸ், ஹுசைன் தலட், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வசிம் ஜூனியர், நசீம் ஷா, சயிம் அய்யூப், சல்மான் அலி அகா.
தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம்:
ஒக்டோபர் 28 – முதல் T20I, ராவல்பிண்டி
ஒக்டோபர் 31 – இரண்டாவது T20I, லாகூர்
நவம்பர் 1 – மூன்றாவது T20I, லாகூர்
நவம்பர் 4 – முதல் ஒருநாள், பைசலாபாத்
நவம்பர் 6 – இரண்டாவது ஒருநாள், பைசலாபாத்
நவம்பர் 8 – மூன்றாவது ஒருநாள், பைசலாபாத்
இலங்கை சுற்றுப்பயணம் (ஒருநாள்):
நவம்பர் 11 – முதல் ஒருநாள், ராவல்பிண்டி
நவம்பர் 13 – இரண்டாவது ஒருநாள், ராவல்பிண்டி
நவம்பர் 15 – மூன்றாவது ஒருநாள், ராவல்பிண்டி
T20I முத்தரப்புத் தொடர்
நவம்பர் 17 – பாகிஸ்தான் எதிர் ஜிம்பாப்வே, ராவல்பிண்டி
நவம்பர் 19 – இலங்கை எதிர் ஜிம்பாப்வே, ராவல்பிண்டி
நவம்பர் 22 – பாகிஸ்தான் எதிர் இலங்கை, லாகூர்
நவம்பர் 23 – பாகிஸ்தான் எதிர் ஜிம்பாப்வே, லாகூர்
நவம்பர் 25 – இலங்கை எதிர் ஜிம்பாப்வே, லாகூர்
நவம்பர் 27 – பாகிஸ்தான் எதிர் இலங்கை, லாகூர்
நவம்பர் 29 – இறுதிப் போட்டி, லாகூர்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















