இலங்கை – அவுஸ்திரேலியா ஒருநாள் தொடர் கண்ணோட்டம்

206
ODI Preview SL vs Aus

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை இலங்கை அணி 3-0 என்று வயிட் வோஷ் செய்த நிலையில் இலங்கைஅவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வேதேசப் போட்டித்தொடரின் 1ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. டெஸ்ட் தொடரை இலகுவாக வென்ற இலங்கை அணிக்கு ஒருநாள் தொடரில் கடும் சவால்களை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடுகளம் மற்றும் வானிலை

போட்டியில் சிறந்தாக சூரிய ஒளியுடன் கூடிய கிரிக்கட்டிற்கு ஏதுவான காலநிலை காணப்படும் என நம்பப்படுகிறது. வழமை போல் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானமாக அமையும்.


நாளைய போட்டியில் விளையாடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படும் அணி விபரம்

இலங்கை அணி

டிஎம் தில்ஷான், குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மேத்யூஸ் , மிலிந்த சிறிவர்தன, தனஞ்சய டி சில்வா, சீகுகே பிரசன்னா, லக்ஷன் சந்தகன், நுவான் பிரதீப், சுரங்க லக்மால்.

அவுஸ்திரேலிய அணி

டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித், ஜார்ஜ் பெய்லி, டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், ஜேம்ஸ் பால்க்னர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சம்பா, நாதன் லியான், ஜோஷ் ஹெசல்வூட்


இலங்கைஅவுஸ்திரேலிய ஒருநாள் வரலாறு

இதுவரை இந்த 2 அணிகளும் ஒருநாள் கிரிக்கட் அரங்கில் 91 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சந்தித்துள்ளன. அதில் இலங்கை அணி 31 போட்டிகளில் வெற்றியையும் அவுஸ்திரேலிய அணி 56 போட்டிகளில் வெற்றியையும் பதிவு செய்துள்ளதோடு 4 போட்டிகள் முடிவின்றிய போட்டிகளாக முடிவடைந்து உள்ளன.  இந்தத் தரவுகளின் படி இலங்கை அணியின் வெற்றி சதவீதம் 35.63 ஆகவும் அவுஸ்திரேலிய அணியின் வெற்றி சதவீதம் 64.36 ஆகவும் காணப்படுகிறது.

  • அதிக ஓட்டங்கள் : அவுஸ்திரேலியா 376/9 (2015ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில்)
  • குறைந்த ஓட்டங்கள் : அவுஸ்திரேலியா 74/10 (2013ஆம் ஆண்டு பிரிஸ்பேர்ண் மைதானத்தில்)
  • அதிக ஓட்டங்களைப் பெற்றுள்ள வீரர் : குமார் சங்கக்கார  – 1675 ஓட்டங்கள் ( 43 போட்டிகளில்)
  • தனி ஒருவர் பெற்ற அதிக ஓட்டம் : டேவிட் வோர்னர் 163
  • அதிக சதங்கள் : எடம் கில்க்ரிஸ்ட் – 6 சதங்கள்
  • அதிக விக்கட்டுகளை வீழ்த்தியுள்ள வீரர்முத்தையா முரளிதரன் 48
  • சிறந்த பந்துவீச்சுமிச்சல் ஜோன்சன்  – 31/6

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்