பாகிஸ்தான் – நியூசிலாந்து போட்டி அட்டவணை, மைதானங்களில் மாற்றம்

265

நியூசிலாந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகளின் பரஸ்பர சம்மத அடிப்படையில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மைதானம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சஹீட் அப்ரிடிக்கு புதிய பதவி

தற்போது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கே ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றது. இந்த டெஸ்ட் தொடரினை அடுத்து நியூசிலாந்து ஒருநாள் சுபர் லீக்கிற்காக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகின்றது.

இந்த நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கராச்சி நகரிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்டானிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

எனினும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் முல்டானில் இருக்கும் காலநிலையை கருத்திற்கொண்டு, இரண்டாவது டெஸ்ட் போட்டியும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் கராச்சி நகருக்கு மாற்றப்பட்டிருக்கின்றது.

இன்னும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் திகதியிலும், அதனை அடுத்து ஒருநாள் தொடர் ஆரம்பமாகும் திகதியிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அதன்படி இரண்டாவது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் ஆரம்பமாகும் திகதிகள் ஒருநாளுக்கு முன்னதாக நடாத்தப்படவிருக்கின்றன.

அதன்படி பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி மாதம் 02ஆம் திகதியும், ஒருநாள் தொடர் ஜனவரி மாதம் 09ஆம் திகதியும் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மாற்றப்பட்ட போட்டி அட்டவணை

முதல் டெஸ்ட் – டிசம்பர் 26-30 – கராச்சி

இரண்டாவது டெஸ்ட் – ஜனவரி 2-6 – கராச்சி

முதல் ஒருநாள் போட்டி – ஜனவரி 9 – கராச்சி

இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜனவரி 11 – கராச்சி

மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜனவரி 13 – கராச்சி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<