ஆசிய மெய்வல்லுனரில் மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்ட நிலானி

137

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளின் மூன்றாவது நாளான நேற்று (23) இரவு நடைபெற்ற, இலங்கை அணியின் பதக்க எதிர்பார்ப்பாக அமைந்த பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை நிலானி ரத்னாயக்க, எதிர்பாராத விதமாக பதக்கம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.

குறித்த போட்டியில் வெள்ளிப் பதக்கமொன்றை பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பு நிலானிக்கு காணப்பட்ட போதிலும், போட்டியின் இறுதி 50 மீற்றரில் கால் தடுக்கி கீழே விழுந்த காரணத்தால் அந்த பதக்க வாய்ப்பை அவர் இழந்தார்.  

ஆசிய மெய்வல்லுனரில் விதூஷா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…

குளிரூட்டப்பட்ட கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை அணியின் பதக்க எதிர்பார்ப்பாக இருந்த பல வீரர்கள் இம்முறை போட்டிகளில் எதிர்பார்த்தளவு சோபிக்கத் தவறிவிட்டனர்.

இந்த நிலையில், இலங்கை அணியின் அனுபவமிக்க வீராங்கனைகளில் ஒருவரான நிலானி ரத்னாயக்க, பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் நேற்று (23) இரவு களமிறங்கியிருந்தார்.

கடந்த வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றிய பஹ்ரைன், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்னைகள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.

ஆசிய மெய்வல்லுனரில் இலங்கை வீரர்களுக்கு பின்னடைவு

கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்று வரும் 23ஆவது ஆசிய மெய்வல்லுனர்…

போட்டியின் ஆரம்பம் முதல் நிதான ஓட்டத்தை முன்னெடுத்த நிலானி, ஏனைய வீராங்கனைகளை முந்திச் செல்வதற்கு பலத்த சிரமத்தை எதிர்கொண்டார். எனினும், முதல் ஐந்து வீராங்கனைகளில் ஒருசேர ஓடிக்கொண்டிருந்த அவர், இறுதி 800 மீற்றரில் முதல் மூன்று இடங்களுக்கான வீராங்கனைகளில் ஒருவராக ஓட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்.

எனவே, முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நிலானியுடன், பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த 2 வீராங்கனைகளும், சீனாவைச் சேர்ந்த வீராங்கனையும் பலத்த போட்டியைக் கொடுத்திருந்தனர்.

எனினும், தனது ஓட்ட வேகத்தைக் கைவிடாமல் தன்னபிக்கையுடன் தொடர்ந்து ஓடிய அவர், வெண்கலப் பதக்கத்துக்காக பஹ்ரைன் நாட்டு வீராங்கனையை முந்திச் செல்வதற்கு பலத்த சவாலை எதிர்கொண்டார்.

இந்த நிலையில், போட்டியை நிறைவுசெய்வதற்கு 50 மீற்றர் தூரத்தில் இருந்த தடை தாண்டலை கடக்க முயன்ற போது நிலானி ரத்னாயக்க துரதிஷ்டவசமாக கீழே தடுக்கி விழுந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பஹ்ரைன் நாட்டு வீராங்கனை வேகமாக ஓடிச் சென்று வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொள்ள, கீழே விழுந்த பிறகும் மீண்டும் தனது முயற்சியை கைவிடால் எல்லைக் கோட்டை நோக்கி ஓடிவந்த நிலானி, நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அடைந்தார்.

இப்போட்டியில் பஹ்ரைன் நாட்டு வீரர்கனையான முத்துலி வின்பிரெட், போட்டியை 9 நிமிடங்களும் 46.18 செக்கன்களில் நிறைவசெய்து தங்கப் பதக்கத்தை வெற்றிகொள்ள, சீனாவைச் சேர்ந்த சுவாங் சுவாங் (9 நிமிடங்களும் 51.76 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொண்டனர்.

இதேநேரம், நிலானிக்குப் பலத்த போட்டியைக் கொடுத்த பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த டைகஸ்ட் மொகொனென், போட்டியை 9 நிமிடங்களும் 53.96 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டதுடன், துரதிஷ்டவசமாக கீழே விழுந்த நிலானி ரத்னாயக்க, போட்டியை 9 நிமிடங்களும் 58.55 செக்கன்களில் நிறைவுசெய்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, இலங்கையில் நடைபெறுகின்ற பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் தனியொருவராக ஓடுகின்ற வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற நிலானி, ஐந்து தடவைகள் 10 நிமிடங்களுக்குள் போட்டியை நிறைவுசெய்த மற்றுமொரு அரிய சாதனையையும் இதன்போது நிகழ்த்தினார்.

ஆசிய பளுதூக்கலில் வரலாற்று வெற்றியுடன் பதக்கம் வென்ற டிலங்க

சீனாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில்…

இதேநேரம், போட்டியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு நிலானி ரத்னாயக்க வழங்கிய விசேட செவ்வியில், ”வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொள்ள முடியாமல் போனது மிகவும் கவலையளிக்கிறது. குறிப்பாக, எனக்கு பலத்த போட்டியைக் கொடுத்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பஹ்ரைன் நாட்டு வீராங்கனை என்னை பல சந்தரப்பங்களில் கையால் தள்ளிவிட்டார். எனவே, இதற்கு எதிராக முறைப்பாடு செய்யும்படி அணியின் முகாமைத்துவத்துக்கு அறிவித்துள்ளேன்” எனவும் குறிப்பிட்டார்.

இடைநடுவில் விலகிய ஹிமாஷ

போட்டிகளின் மூன்றாவது நாளான நேற்று (23) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் தகுதிகாண் போட்டியில் இலங்கை வீரர் ஹிமாஷ ஷான் பங்குபற்றவில்லை.

இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு 2 வாரங்களுக்கு முன் கட்டார் சென்றிருந்த ஹிமாஷ, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றரில் அரையிறுதிப் போட்டிவரை முன்னேறி இருந்தார். எனினும், அவருக்கு ஒட்டுமொத்த வீரர்களில் 16ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இந்த நிலையில், இம்முறை ஆசிய மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றுவதாக இடைநடுவில் தனது பெயரை இணைத்துக் கொண்ட ஹிமாஷவுக்கு நேற்று நடைபெற்ற தகுதிகாண் சுற்றுப் போட்டியில் பங்குபற்ற முடியாமல் போனது. இம்முறை போட்டிகள் நடைபெறும் கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் உள்ள மொண்டோ ஓடுபாதை தனக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தே அவர் 200 மீற்றர் ஓட்டப் போட்டியை புறக்கணித்துள்ளார்.

>>Photos: 23rd Asian Athletics Championship Day 3<<

ஹேமன்தவுக்கு ஆறுதல் வெற்றி

இலங்கையின் மத்திய தூர ஓட்ட வீரரான ஹேமன்த குமார ஆண்களுக்கான 1500 மீற்றர் தகுதிச் சுற்றுப் போட்டியில் நேற்று (23) களமிறங்கினார். இதன்படி, முதலாவது தகுதிச் சுற்றில் பங்குகொண்ட ஹேமன்த, போட்டியை 3 நிமிடங்களும் 56.69 செக்கன்களில் நிறைவு செய்து 4ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இறுதிப் போட்டியில் பிரசாத் மற்றும் தனுஷ்

ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று (23) இரவு நடைபெற்றன. இதில் இலங்கை சார்பாக பிரசாத் விமலசிறி மற்றும் தனுஷ் பிரியரத்ன பங்குபற்றியிருந்தனர்.

, பி என இரு பிரிவுகளாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரிவில் களமிறங்கிய ஜானக பிரசாத் விமலசிறி, 7.57 மீற்றர் தூரம் பாய்ந்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதேபோல, பி பிரிவில் களமிறங்கிய மற்றுமொரு இலங்கை வீரரான தனுஷ் பிரியரத்ன, 7.53 மீற்றர் தூரம் பாய்ந்து ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, இவ்விரண்டு வீரர்களும் இன்று (24) இரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றனர்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<