இந்தப் பருவத்திற்கான கரீபியன் பிரீமியர் லீக் (CPL) T20 தொடரில் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் (TKR) அணிக்காக ஆடி வரும் நிகோலஸ் பூரன் குறிப்பிட்ட ஆண்டொன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரராக சாதனை நிலைநாட்டியிருக்கின்றார்.
>>பாகிஸ்தான் கிரிக்கெட்டுடன் மீண்டும் இணையும் மிஸ்பா
நேற்று (01) செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் – ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிகள் இடையிலான CPL போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நிகோலஸ் பூரன் வெறும் 43 பந்துகளை சந்தித்து 9 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 97 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
அதாவது இந்தப் போட்டியில் அவர் 9 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் 2024ஆம் ஆண்டு T20 போட்டிகளில் 139 சிக்ஸர்களை மொத்தமாகப் பெற்றிருக்கின்றார்.
ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் 135 சிக்ஸர்களை விளாசியதே வீரர் ஒருவர் குறிப்பிட்ட ஆண்டொன்றில் அதிக சிக்ஸர்களை பெற்ற சந்தர்ப்பமாக பதிவாகிய நிலையில் தற்போது நிகோலஸ் பூரன் இந்த சாதனையினை முறியடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<




















