கல்பிட்டி பேல்ஸ் அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த புத்தளம் நியூ ஸ்டார்

939
Puttalam league

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் நடைபெறும்ட்ரகன்ஸ் சம்பியன்ஸ் லீக்சுற்றுத் தொடரில் கல்பிட்டி பேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10-1 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது புத்தளம் நியூ ஸ்டார் விளையாட்டுக் கழக அணி.

ட்ரகன்ஸ் சம்பியன்ஸ் லீக் சுற்றுத் தொடரில் புத்தளம் பிரதேசத்தில் உள்ள தலை சிறந்த 10 கழகங்கள் தெரிவு செய்யப்பட்டு, போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த மாதம் ஆரம்பமாகிய இந்த சுற்றுத் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் இடம்பெற்று முடிந்துள்ளன.

பத்துப் பேர் கொண்ட பெலிகன்ஸ் அணியை வீழ்த்திய கொழும்பு கால்பந்துக் கழகம்

இந்நிலையில், சுற்றின் 3ஆவது லீக் போட்டியில் கல்பிட்டிப் பிரதேசத்தில் தலை சிறந்த ஒரே அணியாக உள்ள பேல்ஸ் அணியும், புத்தளம் பிரதேசத்தின் வளர்ந்து வரும் இளம் வீரர்களைக் கொண்ட நியூ ஸ்டார் அணியும் மோதின. இந்த ஆட்டம் புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் ஆரம்பம் முதலே பந்து நியூ ஸ்டார் அணியினர் வசமே இருந்தது. ஆட்டம் ஆரம்பித்து 7ஆவது நிமிடத்தில் நியூ ஸ்டார் வீரர் இர்பான் கோல் நோக்கி அடித்த பந்து பேல்ஸ் அணியின் கோல் காப்பாளரின் கைகளில் படாமல் கோல் கம்பத்திற்குள் செல்ல, ஆரம்பமாகியது நியூ ஸ்டாரின் கோல் எண்ணிக்கை.

மீண்டும் 5 நிமிடங்கள் கடந்து நியூ ஸ்டார் வீரர் பைக்கர், பேல்ஸ் அணியின் பின்கள வீரர்களை திணரச் செய்து அணி சார்பாக இரண்டாவது கோலைப் பெற, அவ்வணி மேலும் வலுவடைந்தது.

பேல்ஸ் அணி போட்டியில் மீள்வதற்குள், 18ஆவது நிமிடத்தில் அவ்வணியின் தலைவர் சர்பான் கோலைத் தடுப்பதற்காக அடித்த பந்து அவர்களின் கோல்களுக்குள்ளேயே செல்ல ஒவ்ன் கோள் முறையில் மற்றுமொரு கோல் நியூ ஸ்டாருக்குக் கிடைத்தது.

மூன்று கோல்களால் முன்னிலை பெற்றிருந்த வேளையில் போட்டியின் 28ஆவது நிமிடத்தில் இர்பான் மற்றும் பைக்கர் ஆகியோரின் அற்புதமான பந்துப் பரிமாற்றத்தின் மூலம் பைக்கர் தன் பங்கிற்கு 2ஆவது கோலைப் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து பந்து 80 வீதமளவில் நியூ ஸ்டார் அணியினர் வசமே காணப்பட்டது. போட்டியின் 39ஆவது நிமிடத்தில் சர்பி அடித்த பந்து எந்த விதத் தடையும் இன்றி கோல் கம்பத்திற்குள் செல்ல 5-0 என முதல் பாதி ஆட்டம் முடிவுற்றது.

முதல் பாதி: புத்தளம் நியூ ஸ்டார் 5 – 0 கல்பிட்டி பேல்ஸ்

வாய்ப்புகளைத் தவறவிட்ட பாடும்மீன்; காலிறுதியில் புளூ ஸ்ரார்

மீண்டும் போட்டியின் இரண்டாவது பாதி ஆரம்பிக்க, தொடர்ச்சியாக பந்து நியூ ஸ்டார் அணி வீரர்களின் கால்களிலேயே காணப்பட்டது. இதனால், பேல்ஸ் அணி வீரர்கள் மீளமுடியாமல் தவித்து வந்தனர்.

போட்டியின் 51ஆவது நிமிடத்தில் பைக்கர் வழங்கிய சிறந்த பந்துப் பரிமாற்றத்தின்மூலம் சாஜித் தன் பங்கிற்கு ஒரு கோலைப் பெற்றார். இதன் மூலம் அசைக்க முடியாத இடத்தை அடைந்தது நியூ ஸ்டார் அணி.

தொடர்ந்தும் போட்டி நடைபெற 57ஆவது நிமிடத்தில் பேல்ஸ் அணித் தலைவரின் துணிச்சலான உதையின் மூலம் அவ்வணிக்கான முதல் கோல் பெறப்பட்டது. எனினும், எதிரணி வீரர்கள் தமது ஆதிக்கத்தில் எந்த குறைவையும் வெளிப்படுத்தாமல் விளையாடி தொடர்ந்து கோல் ஒன்றைப் பெற்றனர்.

நியூ ஸ்டார் அணி 7 கோல்களால் முன்னிலையில் இருந்த வேளையில் அவ்வணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, இளம் வீரர்கள் மைதானத்திற்கு உள்வாங்கப்பட்டனர்.

அதன் பின்னரும் தொடர்ந்து இரண்டு கோல்களை புத்தளம் தரப்பினர் பெற்றிருந்த வேளையில், ஆட்டத்தின் இறுதி கோலாக போட்டியின் 85ஆவது நிமிடத்தில் சர்பி அடித்த பந்து பேல்ஸ் அணியின் கோல் காப்பாளரின் கைகளில் பட்டபடி கோலுக்குள் சென்றது.

நியூ ஸ்டாரின் மிரட்டலான ஆட்டத்திற்கு பேல்ஸ் அணியால் ஈடு கொடுக்க முடியாமல் போக, ஆட்டம் நிறைவடைவதற்கான சைகை நடுவரினால் வழங்கப்படும்பொழுது நியூ ஸ்டார் வீரர்கள் 10-1 என்ற கோல்கள் கணக்கில் பெற்ற ஆபார வெற்றியைக் கொண்டாடினர்.

முழு நேரம்: புத்தளம் நியூ ஸ்டார் 5 – 0 கல்பிட்டி பேல்ஸ்

எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள இத்தொடரின் ஏனைய போட்டிகள் குறித்த செய்தியை உங்களுக்கு ThePapare.com ஊடாக அறிந்துகொள்ளலாம்.