நியூசிலாந்தில் தனியாளாக போராடி சதமடித்த அஞ்செலோ மெதிவ்ஸ்

2586

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை அணி மற்றும் நியூசிலாந்து பதினொருவர் அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகியுள்ள மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் அஞ்செலோ மெதிவ்ஸ் சதம் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சிய மண்ணில் வரலாறு படைத்த நியுசிலாந்து அணி

பாகிஸ்தான் மற்றும்…

நியூசிலாந்தின் நேப்பியரில் உள்ள மெக்லன் பார்க்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 210 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை முன்னாள் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மாத்திரம் தனித்து நின்று போராட, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் வெறும் 10 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து ஏமாற்றினர். தொடர்ந்து வருகை தந்த அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஓரளவு தாக்குப்பிடிக்க ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் முழுமையாக ஏமாற்றினர். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 104 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

எனினும், தனி ஒருவராக லஹிரு குமாரவுடன் இணைந்து துடுப்பெடுத்தாடிய மெதிவ்ஸ் அபாரமாக ஆடி, ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதில் மெதிவ்ஸ் 3 சிக்ஸ்கள் மற்றும் 19 பௌண்டரிகளை விளாசியிருந்தார். மறுபக்கம் தினேஷ் சந்திமால் 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

குறிப்பாக இந்த போட்டியில், இலங்கை அணியின் தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, ரொஷேன் சில்வா மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்திருந்தனர். பந்துவீச்சில் நியூசிலாந்து அணிசார்பில் பிளெக் கோபர்ன்  3 விக்கெட்டுகளையும், ஸ்னீடென் மற்றும் யங்கஸ்பண்ட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை அணிக்காக சகலதுறையிலும் பிரகாசிக்கத் தயார் – சந்திமால்

பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை் ஆரம்பித்த நியூசிலாந்து பதினொருவர் அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதிகபட்சமாக வில்லியம் ஓ டொன்னெல் 22 ஓட்டங்களையும், டேல் பிலிப்ஸ் 17 ஓட்டங்களையும் பெற்றுத் தந்து ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் லஹிரு குமார, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

ஸ்கோர் விபரம்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க