இலங்கை அணியை வேகத்தால் சுருட்டிய ட்ரென்ட் போல்ட்

505
Image courtesy - ICC Twitter

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ட்ரென்ட் போல்ட்டின் அபரமான வேகப்பந்துக்கு முகங்கொடுக்க முடியாமல் வெறும் 104 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது. அதேநேரம், தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, 231 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணியை குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை

நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையில் …

கிரிஸ்ட்ச்சேர்ச்சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின், நேற்றைய முதல் நாள் ஆட்ட நிறைவில், 88 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இலங்கை அணி ஆட்டத்தை ஆரம்பித்தது. இதன்படி 37 ஓட்டங்கள் இணைப்பாட்டத்துடன் களமிறங்கிய மெதிவ்ஸ் மற்றும் ரொஷேன் சில்வா ஆகியோரின் இணைப்பாட்டம் இன்று விரைவாக தகர்க்கப்பட்டது. 21 ஓட்டங்களை பெற்றிருந்த ரொஷேன் சில்வா ட்ரென்ட் போல்ட்டின் பந்து வீச்சில், டீம் சௌதியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல, 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ட்ரென்ட் போல்ட் தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படு்த்தினார்.  அடுத்து வந்த டில்ருவான் பெரேரா, சுராங்க லக்மால், துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோரை ஓட்டங்கள் இன்றி வெளியேற்றிய ட்ரென்ட் போல்ட், இன்றைய தினத்தின் 6 விக்கெட்டுகளையும் தன் வசப்படுத்தினார். இதில் இறுதிவரை களத்தில் இருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் ஆட்டமிழக்காமல் 33* ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் தனது இறுதி 11 பந்துகளுக்குள் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ட்ரென்ட் போல்ட் 30 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், டீம் சௌதி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர். பின்னர், 74 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி, மதிய போசன இடைவேளையின் போது, விக்கெட்டிழப்பின்றி 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து மதிய போசன இடைவேளைக்கு பின்னரும் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர். இதில், அரைச்சதம் கடந்த ஜீட் ராவல் 72 ஓட்டங்களையும், டொம் லேத்தம் 40 ஓட்டங்களையும் பெற, நியூசிலாந்து அணி தேநீர் இடைவேளை வரை விக்கெட்டிழப்பின்றி, 117 ஓட்டங்களை பெற்றது.

மெதிவ்ஸ் மற்றும் மெண்டிஸின் அனுபவ ஆட்டமும், மாலிங்கவின் தலைவர் பதவியும் – Cricket Kalam 04

நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணியின் நம்பிக்கை மிக்க….

பின்னர், ஆட்டநேரத்தின் இறுதிப்பகுதியில் இலங்கை அணி சற்று சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தி, ஜீட் ராவல் மற்றும் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றியது. ஜீட் ராவல் 74 ஓட்டங்களுடன் வெளியேற, வில்லியம்சன் வேகமாக ஓட்டங்களை குவித்து 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும், இன்றைய ஆட்டநேர இறுதிவரை விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காத லேத்தம் 74 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 24 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சை பொருத்தவரை, லஹிரு குமார மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதேவேளை, இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி, இலங்கை அணியை விட 305 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்