நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிவந்த இலங்கை அணியின் முன்னணி வீரர்களுக்கு மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடருக்கான ஆயத்தத்தை மேற்கொள்ளும் முகமாக இலங்கை அணியில் முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருந்த பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
>>சாதனையுடன் நியூசிலாந்து ஒருநாள் தொடரை வென்ற இலங்கை<<
இவர்களுடன் கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோரும் குழாத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த இந்த வீரர்களுக்கு பதிலாக மூன்று வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படடுள்ளன.
அதன்படி துடுப்பாட்ட வீரர்களான நுவனிது பெர்னாண்டோ மற்றும் லஹிரு உதார ஆகியோர் அணியில் வாய்ப்பை பெற்றுள்ளதுடன், வேகப்பந்துவீச்சாளர் ஏசான் மாலிங்கவும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஒருநாள் தொடரை இலங்கை அணி வெற்றிக்கொண்டுள்ள நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை (19) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<