Home Tamil ஐ.பி.எல் தொடரை அடுத்து மாகாண ஒரு நாள் தொடரிலும் அசத்திய லசித் மாலிங்க

ஐ.பி.எல் தொடரை அடுத்து மாகாண ஒரு நாள் தொடரிலும் அசத்திய லசித் மாலிங்க

750

கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்கள் குழாத்தினை தெரிவு செய்யும் நோக்குடன் இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்த “சுபர் 4” மாகாண ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டியில் காலி அணி லசித் மாலிங்கவின் அதிரடிப்பந்துவீச்சோடு, கண்டி அணியினை 156 ஓட்டங்களால் அதிரடியான முறையில் தோற்கடித்துள்ளது.

முன்னதாக கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கண்டி அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை லசித் மாலிங்க தலைமையிலான காலி அணிக்கு வழங்கினார்.

மும்பை அணியின் வெற்றியுடன் நள்ளிவிரவில் நாடு திரும்பிய மாலிங்க

ஐ.பி.எல். தொடரில் நேற்று (03) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 37 ஓட்டங்கள்

இதன்படி முதலில் துடுப்பாடிய காலி அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 255 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

காலி அணியின் துடுப்பாட்டம் சார்பாக தேசிய அணி வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் சந்துன் வீரக்கொடி ஆகியோர் அரைச்சதம் பெற்றிருந்தனர். இதில், குசல் மெண்டிஸ் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 87 பந்துகளில் 65 ஓட்டங்களை குவிக்க, சந்துன் வீரக்கொடி 63 பந்துகளில் 9 பெளண்டரிகள் உடன் 56 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், மினோத் பானுக்கவும் காலி அணிக்காக 39 ஓட்டங்களுடன் பெறுமதி சேர்த்திருந்தார்.

தம்புள்ளை அணியை இலகுவாக வீழ்த்திய கொழும்பு

கண்டி அணியின் பந்துவீச்சு சார்பில் ஜெப்ரி வன்டர்சே மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 256 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கண்டி அணி, காலி அணியின் தலைவரான லசித் மாலிங்கவின் பந்துவீச்சினை முகம் கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது.

Photos: Kandy vs Galle | Super Provincial One Day 2019

தொடர்ந்து 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த கண்டி அணி வெறும் 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் படுதோல்வியடைந்தது.

கண்டி அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவரான திமுத் கருணாரத்ன 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்று அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்திருந்தார். கண்டித்தரப்பில் திசர பெரேரா, சதீர சமரவிக்ரம போன்ற தேசிய அணி வீரர்கள் இருந்த போதிலும் அவர்களில் ஒருவரேனும் கூட 20 ஓட்டங்களையேனும் தாண்டியிருக்கவில்லை.

மறுமுனையில் காலி அணியின் பந்துவீச்சு சார்பில் லசித் மாலிங்க வெறும் 49 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை சாய்த்து தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்ததோடு, துஷ்மந்த சமீரவும் 3 விக்கெட்டுக்களை சாய்த்து தனது தரப்பு வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தார்.

மும்பை அணியின் வெற்றியுடன் நள்ளிவிரவில் நாடு திரும்பிய மாலிங்க

ஐ.பி.எல். தொடரில் நேற்று (03) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 37 ஓட்டங்கள் .

நேற்று (4) ஐ.பி.எல். போட்டி ஒன்றில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிரடியான பந்துவீச்சினை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி ஒன்றினை பெற உதவிய லசித் மாலிங்க, கண்டி அணிக்கு எதிரான இப்போட்டியின் மூலம் உள்ளூர் ஒரு நாள் (List A) போட்டிகளில் வெளிப்படுத்திய மிகச் சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேநேரம் கண்டி அணிக்கு எதிரான போட்டியுடன் சுபர் 4 மாகாண ஒரு நாள் தொடரை மிக வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கும் காலி அணி, இத்தொடரில் அடுத்த போட்டியில் தம்புள்ளை அணியை எதிர்வரும் சனிக்கிழமை (06) எதிர் கொள்கின்றது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க

Result


Team Kandy
99/10 (18.5)

Team Galle
255/10 (50)

Batsmen R B 4s 6s SR
Sandun Weerakkody c Dimuth Karunaratne b Jeffrey Vandersay 56 63 9 0 88.89
Lahiru Thirimanne c Nuwan Pradeep b Kasun Rajitha 10 21 1 0 47.62
Dhanajaya de silva c Manoj Sarathchandra b Thisara Perera 5 18 0 0 27.78
Kusal Mendis c Sadeera Samarawickrama b Jeffrey Vandersay 65 87 3 1 74.71
Milinda Siriwardana c Priyamal Perera b Sachithra Senanayake 32 31 1 2 103.23
Minod Bhanuka c Sadeera Samarawickrama b Jeffrey Vandersay 39 43 2 1 90.70
Wanindu Hasaranga run out () 3 3 0 0 100.00
Shammu Ashan c Chathuranga de Sliva b Kasun Rajitha 20 15 3 0 133.33
Dhammika Prasad run out () 15 11 0 1 136.36
Lasitha Malinga b Kasun Rajitha 2 5 0 0 40.00
Dushmantha Chameera not out 2 3 0 0 66.67


Extras 6 (b 1 , lb 2 , nb 0, w 3, pen 0)
Total 255/10 (50 Overs, RR: 5.1)
Bowling O M R W Econ
Nuwan Pradeep 8 1 34 0 4.25
Kasun Rajitha 9 0 44 3 4.89
Thisara Perera 7 0 37 1 5.29
Sachithra Senanayake 10 0 36 1 3.60
Jeffrey Vandersay 10 0 55 3 5.50
Chathuranga de Sliva 6 0 46 0 7.67


Batsmen R B 4s 6s SR
Sadeera Samarawickrama c Minod Bhanuka b Lasitha Malinga 15 13 3 0 115.38
Dimuth Karunaratne not out 35 48 3 0 72.92
Pathum Nissanka c Dhammika Prasad b Lasitha Malinga 2 2 0 0 100.00
Priyamal Perera c Minod Bhanuka b Lasitha Malinga 2 6 0 0 33.33
Sachithra Senanayake lbw b Lasitha Malinga 6 7 1 0 85.71
Manoj Sarathchandra b Lasitha Malinga 0 2 0 0 0.00
Thisara Perera c Minod Bhanuka b Dushmantha Chameera 12 11 2 0 109.09
Chathuranga de Sliva c Milinda Siriwardana b Dushmantha Chameera 1 3 0 0 33.33
Jeffrey Vandersay c Lahiru Thirimanne b Dushmantha Chameera 19 16 4 0 118.75
Kasun Rajitha c Minod Bhanuka b Lasitha Malinga 0 6 0 0 0.00
Nuwan Pradeep b Lasitha Malinga 0 1 0 0 0.00


Extras 7 (b 0 , lb 3 , nb 2, w 2, pen 0)
Total 99/10 (18.5 Overs, RR: 5.26)
Bowling O M R W Econ
Lasitha Malinga 9.5 0 49 7 5.16
Dushmantha Chameera 5 0 27 3 5.40
Dhammika Prasad 4 0 20 0 5.00