சச்சினின் அதிவேக ஒருநாள் அரைச்சத சாதனையை முந்திய நேபாள வீரர்

80

நேபாளம் கிரிக்கெட் அணியின் 15 வயதான கௌஷால் மல்லா ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் அரைச்சதம் அடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். 

நேபாளத்தில் முதன்முறையாக நேபாளம், ஓமான், அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான .சி.சியின் உலகக் கிண்ண லீக் தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது

கிர்திபூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் நேபாளம்அமெரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை எடுத்தது.

இள வயதில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த நசீம் ஷாஹ்

ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது………

துடுப்பாட்டத்தில் பினோத் பண்டாரி 59 ஓட்டங்களையும், கௌஷால் மல்லா 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா அணி, 44.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது

நேபாளம் அணிக்காக 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கௌஷால் மல்லா, இந்தப் போட்டியில் 49 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறிய வேளையில் களமிறங்கினார். இவரது அரைசதத்தின் உதவியுடன் நேபாளம் அணி 190 ஓட்டங்களை பெற்றதுடன் அணிையும் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் நேபாளம் அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட 15 வயதுடைய இடதுகை துடுப்பாட்ட வீரரான கௌஷால் மல்லா, 51 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 50 ஓட்டங்களைக் குவித்தார்

இதன்மூலம் இளம் வயதில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அரைச்சதம் கடந்த வீரர் என்ற பெருமையை கௌஷால் மல்லா பெற்றார்.

முதல்தரப் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸை பதிவு செய்த தசுன் ஷானக்க

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரிவு …………

முன்னதாக நேபாளத்தைச் சேர்ந்த 16 வயதுடைய ரோஹித் குமார் பவ்டெல் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக 55 ஓட்டங்களை எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்

சச்சின் டெண்டுல்கர் தனது அறிமுகத் தொடரான பாகிஸ்தானுக்கு எதிரான பைசலாபாத்தில் நடைபெற்ற போட்டியில் அரைச்சதம் கடந்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

நேபாளம் அணி 2018 உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தின் போது ஒருநாள் சர்வதேச அந்தஸ்து பெற்றது. எனினும், அந்நாட்டு கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடு இருப்பதாகத் தெரிவித்து .சி.சியினால் தடை விதித்த போதிலும் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதன்பிறகு கடந்த ஆண்டுக்டோபரில் ஐசிசி தடையை விலக்கியது  குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<