ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அனுபவ வேகப்பந்துவீச்சாளரான நவீன் உல் ஹக் தோற்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் முதல் போட்டியில் விளையாடவில்லை.
>>ஹொங்கொங் வெற்றியுடன் சுப்பர் 4 வாய்ப்பை பலப்படுத்திய இலங்கை<<
தொடர்ந்தும் இவருடைய தோற்பட்டை உபாதை முழுமையாக குணமடையாத நிலையில், அவரை ஆசியக்கிண்ணத் தொடரிலிருந்து நீக்கியுள்ளதாக ஆப்கானிஸ்தான் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நவீன் உல் ஹக்கிற்கு பதிலாக மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான அப்துல்லாஹ் அஹ்மட்ஷாய் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அணி குறிப்பிட்டுள்ளது.
அப்துல்லாஹ் அஹ்மட்ஷாய் இம்மாத ஆரம்பத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக நடைபெற்ற T20I போட்டியில் அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















