தேசிய எறி பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட எறி பந்து சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச பாடசாலைகள் அதிக ஆதிக்கம் செலுத்தி பல வெற்றிகளைப் பெற்றுள்ளன.

குறித்த தேசிய மட்டப் போட்டிகள் ஹம்பாந்தோட்டை வெவரவெவ திஸ்ஸமகாராம மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றன. இதில் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மிகவும் சிறந்த எறி பந்து அணிகள் பங்குகொண்டிருந்தன.

இச்சுற்றுப் போட்டியில் 15 வயதின் கீழ் பிரிவு போட்டி நிகழ்ச்சிகளில் தேசிய மட்டத்தில் A பிரிவில் உள்ள 13 பாடசாலை அணிகள் கலந்துகொண்டன. இதன் இறுதிப் போட்டி ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலய அணிக்கும், வெல்லவாய குமாரதாஸ மகா வித்தியாலய அணிக்குமிடையில் நடைபெற்றது.

போட்டியின் நிறைவில் 25-16, 25-18 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலய அணி முதல் இரண்டு சுற்றையும் வெற்றிகொண்டு 15 வயதின் கீழ் பிரிவின் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

எறி பந்து போட்டி நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண பாடசாலை ஒன்று முதலாம் பிரிவில் தேசிய மட்ட சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

Rahmaniya
றகுமானியா மகா வித்தியாலய அணி

றகுமானியா மகா வித்தியாலய அணி விபரம்

ஹம்மாத், றிப்னாஸ், ஹிஸாம். மின்ஹாஜ், இஸ்ஸத், பாஹீர், றிஜாஸ், ஆதீக், பர்வீஸ், வஸீம், அக்தாஸ்.

பயிற்றுவிப்பாளர்கள் – எம்.றியாஸ், நபியுடீன்

15 வயதின் கீழ் பிரிவில் மூன்றாமிடத்தை தெரிவு செய்வதற்கான போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணியும், வெல்லவாய மகா வித்தியாலய அணியும் மோதிக்கொண்டன. அதில் 25-6, 25-10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை வெற்றி பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை 2014ஆம் ஆண்டு 19 வயதின் கீழ் C பிரிவில் சம்பியனாகவும், 2015ஆம் ஆண்டு 19 வயதின் கீழ் B பிரிவில் சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Aligaar National school
அலிகார் தேசிய பாடசாலை அணி

அலிகார் தேசிய பாடசாலை அணி விபரம்

ஏ.எம்.அஸீம், ஏ.ஜீ.இஸ்பாக், எஸ்.எம்.நாஜீத், எஸ்.எம்.ரஸாத், எல்.எம்.முஸாதீக், எம்.என்.எம்.நுஸைர், எம்.என்.றிஸ்னி அஹமட், எஸ்.எம்.அர்ஹம், ஏ.என்.ராஸீம் அஹமட், ஜே.எம்.றிஹான், ஏ.எம்.அஸ்கர், ஏ.சாதீத் அஹமட்.

பயிற்றுவிப்பாளர் – ஏ.ஏ.முகம்மட் அலி சியாம்

இதேவேளை, 15 வயதின் கீழ் C பிரிவு போட்டியில் ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலய அணி சம்பியனாகத் தெரிவாகியது. இவ்வணி இறுதிப் போட்டியில் நாரதா மகா வித்தியாலய அணியை எதிர்கொண்டது. போட்டி நிறைவில் 25-12, 25-19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இரண்டு சுற்றுக்களையும் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலய அணி வென்றது.

அதேபோன்று, 19 வயதின் கீழ் C பிரிவு போட்டியில் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலய அணி இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது. இதன் இறுதிப் போட்டியில் திருகோணமலை மாவட்டத்தின் அபேபுற மகா வித்தியாலய அணியிடம் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலய அணி 25-20, 25-22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Makkan makkar
மாக்கான் மாக்கார் மகா வித்தியாலய அணி

மாக்கான் மாக்கார் மகாவித்தியாலய 15 வயதின் கீழ் அணி விபரம்

எச்.ஹபீப் றகுமான், ஐ.முகம்மது சாபி, எஸ்.முகம்மட் சியாம், எம்.யு.முகம்மட் நிப்ராஸ், ஐ.முகம்மட் சிப்ரான், எம்.எச்.முகம்மட் றினாஸ், எம்.எஸ்.முகம்மது பஹீஸான், எல்.சபாத், என்.முகம்மட் அனாஸீம், ஏ.முகம்மட் அஜீனாஸ், எம்.எப்.முகம்மட் நுக்மான், என்.முகம்மட் பஹாத்.

மாக்கான் மாக்கார் மகா வித்தியாலய 19 வயதின் கீழ்  அணி விபரம்

ஏ.முகம்மட் பர்சாத், எம்.எச்.முகம்மட் றிப்னாஸ், ஏ.ஸீ.முகம்மட் நஸீம், எஸ்.எல்.சிபான், எஸ்.அஹமட் முஸாரப், எல்.முகம்மட் பர்ஹான், ஜே.முகம்மட் அஸ்கான், ஆர்.றக்கீப், எம்.ஆர்.முகம்மட் றிஸான், வீ.முகம்மட் சைபுடீன், ஏ.சீ.அஹமட் அக்கீல், ஏ.கே.முகம்மட் அர்சாத்.

(பயிற்றுவிப்பாளர்கள் – ஏ.எம்.உபைதுள்ளாஹ், ஜே.எ.ஜெஸீம்)