இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் இன்று (26) நடைபெற்ற போட்டிகளில் தம்புள்ள மற்றும் காலி அணிகள் வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.
இதில் கொழும்பு அணிக்கெதிரான போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய மினோத் பானுக தலைமையிலான தம்புள்ள அணி இம்முறை போட்டித்தொடரில் தொடர்ச்சியாக 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்ய, காலி அணிக்கெதிரான போட்டியில் ஒரு விக்கெட்டினால் தோல்வியைத் தழுவிய ஜனித் லியனகே தலைமையிலான ஜப்னா அணி 3ஆவது தோல்வியை சந்தித்தது.
அதேபோல, இன்றைய நாள் போட்டிகளை பொருத்தவரை கொழும்பு அணிக்கெதிரான போட்டியில் தம்புள்ள அணியின் பவன் ரத்நாயக, ஜப்னா அணியின் ரொன் சந்திரகுப்த மற்றும் காலி அணியின் பசிந்து சூரியபண்டார, பெதும் குமாரவும் அரைச் சதமடித்தனர்.
அதேபோல, கொழும்பு அணிக்கெதிரான போட்டியில் தம்புள்ள அணியின் அஷான் பிரியன்ஜன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தம்புள்ள எதிர் கொழும்பு
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மினோத் பானுக தலைமையிலான தம்புள்ள அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.
தம்புள்ள அணியின் பணிப்புரைக்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 ஓவர்கள் நிறைவில் 140 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
கொழும்பு அணி சார்பில் அதிகபட்சமாக அஷேன் பண்டார 36 ஓட்டங்களையும், கலன பெரேரா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்தளவு பங்களிப்பை வழங்கவில்லை. பந்துவீச்சை பொருத்தவரை அஷான் பிரியன்ஜன் 20 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி இளம் வீரர் பவன் ரத்நாயகவின் அரைச் சதத்தின் உதவியுடன் 27.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
>>லசித் குரூஸ்புள்ளே சதமடிக்க; சகலதுறையிலும் பிரகாசித்த லஹிரு சமரகோன்
ஆந்த அணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய பவன் ரத்நாயக ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 53 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இதன்மூலம், போட்டித்தொடரில் தங்களுடைய 5ஆவது போட்டியில் விளையாடி தம்புள்ள அணி தங்களுடைய 5ஆவது வெற்றியையும், கொழும்பு அணி தங்களுடைய 3ஆவது தோல்வியையும் பதிவுசெய்துள்ளது.
Result
Batsmen
R
B
4s
6s
SR
Sithara Gimhana
lbw b Lahiru Samarakoon
7
15
1
0
46.67
Krishan Sanjula
run out (Abishek Liyanarachchi)
18
18
2
0
100.00
Heshan Fernando
st Minod Bhanuka b Ashan Priyanjan
19
39
2
0
48.72
Nipun Dhananjaya
st Minod Bhanuka b Ashan Priyanjan
4
20
0
0
20.00
Ashen Bandara
run out (Lakshan Sandakan)
36
40
1
1
90.00
Sachitha Jayathilake
c Lasith Abeyrathne b Ashan Priyanjan
4
9
0
0
44.44
Dushan Vimukthi
c Pavan Rathnayake b Sonal Dinusha
14
28
2
0
50.00
Kalana Perera
not out
24
26
2
1
92.31
Udith Madushan
lbw b Ashan Priyanjan
1
25
0
0
4.00
Nuwan Pradeep
b Ashan Priyanjan
5
9
1
0
55.56
Danushka Sandaruwan
lbw b Ashan Priyanjan
0
1
0
0
0.00
Extras
8 (b 0 , lb 2 , nb 2, w 4, pen 0)
Total
140/10 (38 Overs, RR: 3.68)
Bowling
O
M
R
W
Econ
Nuwan Thushara
5
1
25
0
5.00
Lahiru Samarakoon
4
0
14
1
3.50
Ashan Priyanjan
10
2
20
6
2.00
Ranitha Liyanarachchi
4
0
14
0
3.50
Dushan Hemantha
7
0
32
0
4.57
Sonal Dinusha
5
0
28
1
5.60
Lakshan Sandakan
3
1
5
0
1.67
Batsmen
R
B
4s
6s
SR
Abishek Liyanarachchi
lbw b Danushka Sandaruwan
14
20
3
0
70.00
Minod Bhanuka
c Dushan Vimukthi b Nuwan Pradeep
9
15
1
0
60.00
Pavan Rathnayake
st Sithara Gimhana b Dushan Vimukthi
51
53
7
1
96.23
Lasith Abeyrathne
c Sithara Gimhana b Nipun Dhananjaya
30
38
3
0
78.95
Sonal Dinusha
not out
29
21
3
1
138.10
Ranitha Liyanarachchi
not out
11
19
1
0
57.89
Extras
2 (b 0 , lb 0 , nb 1, w 1, pen 0)
Total
146/4 (27.3 Overs, RR: 5.31)
Bowling
O
M
R
W
Econ
Nuwan Pradeep
6
0
51
1
8.50
Kalana Perera
2
0
7
0
3.50
Dushan Vimukthi
5.3
0
30
1
5.66
Danushka Sandaruwan
7
0
27
1
3.86
Udith Madushan
4
0
19
0
4.75
Nipun Dhananjaya
3
0
12
1
4.00
ஜப்னா எதிர் காலி
ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியானது கடைசி ஓவர் வரை பரபரப்பை ஏற்படுத்தியதுடன், ஒரு விக்கெட்டினால் காலி அணி த்ரில் வெற்றியயைப் பதிவு செய்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணிக்கு நவோத் பரணவிதான மற்றும் ரொன் சந்திரகுப்த ஆகியோர் அரைச் சத இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.
நவோத் பரணவிதான 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், தொடர்ந்து களமிறங்கிய ஜப்னா அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஓட்டங்களைக் குவித்தனர். குறிப்பாக கசுன் அபேரட்னவும், அணித் தலைவர் ஜனித் லியனகேவும் தலா 36 ஓட்டங்களையும், இந்த தொடரில் முதல் அரைச் சதம் விளாசிய ரொன் சந்திரகுப்த 57 ஓட்டங்கள் என சிறப்பாக ஓட்டங்களை குவித்தனர்.
தொடர்ந்து வந்த வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், பின்வரிசையில் களமிறங்கி மீண்டும் நம்பிக்கை கொடுத்த லஹிரு சமரகோன், 41 பந்துகளில் 48 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுக்க, ஜப்னா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ஓட்டங்களை எடுத்தது. பந்துவீச்சில் திலங்க உதேஷன மற்றும் கவிஷ்க அன்ஜுல ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
>>லஹிரு உதார, அஹானின் சிறப்பாட்டத்தால் கண்டிக்கு முதல் வெற்றி
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய காலி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 83 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எவ்வாறாயினும், பசிந்து சூரியபண்டார அரைச் சதம் கடந்து பெற்றுக்கொடுத்த 59 ஓட்டங்கள், பெதும் குமாரவின் 57 ஓட்டங்கள் மற்றும் கடைசி நேரத்தில் அதிரடி காண்பித்த கவிஷ்க அன்ஜுலவின் 41 ஓட்டங்கள் உதவியுடன் 49.1 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து காலி அணி வெற்றியிலக்கை அடைந்தது. பந்துவீச்சில், ஷிரான் பெர்னாண்டோ மற்றும் திலும் சுதீர ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இதன்மூலம், போட்டித்தொடரில் தங்களுடைய 5ஆவது போட்டியில் விளையாடி காலி அணி தங்களுடைய 2ஆவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
Result
Batsmen
R
B
4s
6s
SR
Navod Paranavithana
c Sohan de Livera b Kavishka Anjula
36
57
3
0
63.16
Ron Chandraguptha
c Sohan de Livera b Praveen Jayawickrama
57
105
3
0
54.29
Kasun Abeyratne
b Kavishka Anjula
36
32
5
0
112.50
Janith Liyanage
c Pathum Kumara b Akila Dananjaya
36
48
2
0
75.00
Kamesh Nirmal
b Suminda Lakshan
1
3
0
0
33.33
Lahiru Madushanka
not out
48
41
2
1
117.07
Ravindu Fernando
c Pasindu Sooriyabandara b Tilanga Udeshana
2
4
0
0
50.00
Avishka Tharindu
c Mohammad Shamaaz b Tilanga Udeshana
2
4
0
0
50.00
Shiran Fernando
not out
10
6
1
0
166.67
Extras
17 (b 0 , lb 7 , nb 0, w 10, pen 0)
Total
245/7 (50 Overs, RR: 4.9)
Bowling
O
M
R
W
Econ
Tilanga Udeshana
9
0
47
2
5.22
Akila Dananjaya
10
3
28
1
2.80
Kavishka Anjula
9
0
55
2
6.11
Vishad Randika
1
0
2
0
2.00
Praveen Jayawickrama
10
0
44
1
4.40
Dhananjaya Lakshan
1
0
11
0
11.00
Suminda Lakshan
10
0
51
1
5.10
Batsmen
R
B
4s
6s
SR
Sohan de Livera
c Jeffrey Vandersay b Dilum Sudeera
37
30
6
0
123.33
Mohammad Shamaaz
b Navod Paranavithana
12
16
2
0
75.00
Pasindu Sooriyabandara
b Ravindu Fernando
59
81
3
0
72.84
Dhananjaya Lakshan
c Lahiru Madushanka b Dilum Sudeera
2
9
0
0
22.22
Vishad Randika
b Shiran Fernando
8
21
0
0
38.10
Pathum Kumara
b Shiran Fernando
57
69
4
0
82.61
Suminda Lakshan
run out (Janith Liyanage)
0
3
0
0
0.00
Kavishka Anjula
c Raveen De Silva b Lahiru Madushanka
41
46
3
1
89.13
Akila Dananjaya
not out
10
13
1
0
76.92
Praveen Jayawickrama
run out (Ravindu Fernando )
8
8
0
0
100.00
Tilanga Udeshana
not out
0
0
0
0
0.00
Extras
15 (b 0 , lb 0 , nb 1, w 14, pen 0)
Total
249/9 (49.1 Overs, RR: 5.06)
Bowling
O
M
R
W
Econ
Shiran Fernando
8.1
0
49
2
6.05
Lahiru Madushanka
4
0
22
1
5.50
Navod Paranavithana
6
0
36
1
6.00
Ravindu Fernando
10
0
55
1
5.50
Dilum Sudeera
10
0
29
2
2.90
Janith Liyanage
1
0
14
0
14.00
Jeffrey Vandersay
10
0
44
0
4.40
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















