இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண மோதலும் மழையினால் இரத்து

106
Photo by Simon Cooper/PA Images via Getty Images
 

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த உலகக் கிண்ணத் தொடரின் 18 ஆவது லீக் போட்டி மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டுள்ளது.

இன்று (13) நொட்டிங்ஹம் நகரில் இடம்பெறவிருந்த இப்போட்டியில் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தோல்விகளையே சந்திக்காத இந்திய அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் பலத்த போட்டித்தன்மை நிலவும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், போட்டி கைவிடப்பட்டுள்ளதால் குறித்த எதிர்பார்ப்பு வீணாகியுள்ளது. 

உபாதைக்குள்ளான நுவான் பிரதீப்பின் தற்போதைய நிலை

உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய…

இப்போட்டி கைவிடப்பட்டுள்ள காரணத்தினால் இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளி வீதம் பெற்றுள்ளன. 

இதேநேரம், இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மோதல் இந்த உலகக் கிண்ணத் தொடரில் மழை காரணமாக கைவிடப்பட்ட நான்காவது போட்டியாகவும் மாறியிருக்கின்றது.

அடுத்ததாக இந்திய அணி, தமது உலகக் கிண்ண மோதலில் பாகிஸ்தான் அணியினை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) மன்செஸ்டர் நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.

இதேவேளை நியூசிலாந்து அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் எதிர்வரும் புதன்கிழமை (19) தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<