ஜப்னா கிங்ஸ் பயிற்றுவிப்பு குழாத்தில் மாற்றம்

Lanka Premier League 2021

167

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக, முன்னாள் இலங்கை வீரரும் தற்போதைய குவைட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளருமான  முதுமுதலிகே புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜப்னா அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக சசித் பத்திரன செயற்பட்டுவந்த போதும், அவர் தற்போது இலங்கை U19 அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.

LPL போட்டிகளை நேரடியாக பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி!

எனவே, சசித் பத்திரனவின் இடத்துக்கு முதுமுதலிகே புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜப்னா கிஙஸ் அணி இன்றைய தினம் (24)  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

முதுமுதலிகே புஷ்பகுமாரவின் பயிற்றுவிப்பின் கீழ், குவைட் அணி மிகச்சிறந்த முன்னேற்றத்தை பெற்று வருகின்றது. இவர், 2019ம் ஆண்டிலிருந்து குவைத் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.

இவரது பயிற்றுவிப்பு காலப்பகுதியில், குவைட் அணி ஆசிய கிண்ணத்துக்கு தகுதிபெற்றிருந்ததுடன், ஆசிய மேற்கு பிராந்திய சம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தது.

அதுமாத்திரமின்றி, முதுமுதலிகே புஷ்பகுமார இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் கழகமான கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளராக 9 ஆண்டுகள் செயற்பட்டுள்ள அனுபவத்தையும் கொண்டுள்ளார்.

ஜப்னா கிங்ஸ் அணியில், ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ள வனிந்து ஹஸரங்க மற்றும் இளம் சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். எனவே, முதுமுதலிகே புஷ்பகுமாரவின் பயிற்றுவிப்பின் கீழ், ஜப்னா கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சு மேலும் பலமையுடம் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<