டெஸ்ட் போட்டிகளில் இருந்து மொயின் அலி ஓய்வு

160
Getty Images

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கின்றார்.

IPL இல் புதிய மைல்கல்லை எட்டிய கோஹ்லி, ஹர்ஷல்

வருகின்ற மாதங்களில் (கிரிக்கெட்டிற்காக) தனது குடும்பத்தினை நீண்ட காலமாக பிரிந்திருப்பது தனக்கு அசெளகரியத்தினை உருவாக்கும் வகையில் அமைந்திருப்பதாக குறிப்பிட்டே மொயின் அலி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

34 வயது நிரம்பிய மொயின் அலி, தனது முடிவு தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினுடைய தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் ஆகியோருக்கு அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஞ்சு சம்சனுக்கு மீண்டும் அபராதம்

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதும் மொயின் அலி, இங்கிலாந்து அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் வெளிநாட்டு T20 தொடர்களுக்கான போட்டிகளிலும் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம், இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் மொயின் அலி 28.29 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 2,914 ஓட்டங்களை குவித்திருப்பதோடு, 195 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…