இந்திய தொடருக்கான ஆஸி. ஒருநாள், T20I குழாம்கள் அறிவிப்பு

40
AUSTRALIA ODI SQUAD

இந்திய – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் பங்கெடுக்கும் அவுஸ்திரேலியாவின் வீரர் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

>>இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2 பயிற்சியாளர்கள் நியமனம்<<

இந்தியாவிற்கு இம்மாத நடுப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய அணியானது அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் என்பவற்றில் ஆடுகின்றது.

இந்த தொடர்களுக்காக முன்னதாக இந்தியாவின் ஒருநாள் மற்றும் T20I அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவுஸ்திரேலியா தமது ஒருநாள் மற்றும் T20I அணிக் குழாம்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான மிச்சல் ஸ்டார்க் மீள அழைக்கப்பட்டுள்ள நிலையில் உபாதைக்குள்ளாகியிருந்த வேகப்பந்துவீச்சாளரான மெதிவ் ஷோர்ட், மிச்சல் ஒவன் மற்றும் மெதிவ் ரென்ஷோவ் ஆகிய வீரர்களும் அவுஸ்திரேலிய ஒருநாள் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

>>ரோஹித்திற்குப் பதிலாக இந்திய ஒருநாள் அணியின் தலைவராக சுப்மான் கில்<<

அதேவேளை T20i தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்குமான தமது வீரர் குழாத்தினை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய அணியானது, அதனை அடுத்த ஆண்டுக்கான T20i உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் வகையில் வீரர்களை உள்ளடக்கியிருக்கின்றது.

அவுஸ்திரேலிய – இந்திய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒக்டோபர் 19 தொடக்கம் 25 வரையும், ஐந்து போட்டிகள் T20I தொடர் ஒக்டோபர் 29 தொடக்கம் நவம்பர் 8 வரையும் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய ஒருநாள் அணி

 

மிச்சல் மார்ஷ் (தலைவர்), ஷேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கொன்னொலி, பென் ட்வார்ஷூயிஸ், நேதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசல்வூட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஸ், மிச்செல் ஓவன், மெதிவ் ரென்ஷோவ், மெதிவ் ஷோர்ட், மிச்செல் ஸ்டார்க், அடம் ஷம்பா.

 

அவுஸ்திரேலிய T20i அணி (முதல் இரண்டு போட்டிகளுக்கு மாத்திரம்)

 

மிச்சல் மார்ஷ் (தலைவர்), ஷோன் அப்போட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் ட்வார்ஷூயிஸ், நேதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வூட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஸ், மெதிவ் குஹ்னெமான், மிச்செல் ஓவன், மெதிவ் ஷோர்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அடம் ஷம்பா.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<