விடைபெற்றார் பீலே

230

கால்பந்து வரலாற்றில் தோன்றிய மிகச் சிறந்த வீரர் என வர்ணிக்கப்படும் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82ஆவது வயதில் காலமானார்.

தனது 21 ஆண்டு கால்பந்து வாழ்வில் 1,363 போட்டிகளில் 1,281 என்ற உலக சாதனை கோல்களை புகுத்திய பீலே தனது நாட்டுக்காக 92 போட்டிகளில் 77 கோல்களை பெற்றுள்ளார்.

1958, 1962 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை வென்று, மூன்று முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி ஒரே வீரர் என சாதனை படத்த பீலேவுக்கு 2000ஆம் ஆண்டில் நூற்றாண்டின் சிறந்த வீரர் என பிஃபா விருது வழங்கியது.

அவர் அண்மைய ஆண்டுகளில் சிறுநீரக மற்றும் சுக்கிரியன் சுரப்பி பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மத்திய ஆசிய மகளிர் கடற்கரை கரப்பந்தாட்டத்தில் சம்பியானகிய இலங்கை

வழக்கமான மருத்துவச் சோதனையின்போது கட்டி ஒன்று கண்டறியப்பட்டதை அடுத்து சாவோ போலோவில் உள்ள அல்பர்ட் ஐன்ஸ்டைன் மருத்துவமனையில் கடந்த 2021 செப்டெம்பரில் பீலேவின் பெருங்குடலில் இருந்த அந்தக் கட்டி அகற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டெம்பரில் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது மகள் கெலி நசிமென்டோ, பீலேவின் உடல் நிலை பற்றி சமூகதளத்தில் தொடர்ச்சியாக தகவல்களை வெளியிட்டு வந்தார்.

கடந்த வியாழனன்று மருத்துவமனையில் பீலேவின் உடலுடன் குடும்பத்தினர் கைகோர்த்து நிற்கும் படம் ஒன்றை பதிவேற்றிய நசிமென்டோ, ‘எல்லாவற்றுக்கும் நாம் உங்களுக்கு நன்றி கூறுகிறோம். நாம் உங்களுக்கு எமது அளவற்ற அன்பை கூறிக்கொள்கிறோம். உங்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

பீலேவின் முந்தைய மருத்துவ நிலையுடன் தொடர்புபட்ட பெருங்குடல் புற்றுநோய் வளர்ந்ததன் விளைவாக பல உடல் உறுப்பு செயலிழந்த நிலையில் பீலே மரணித்ததாக மருத்துவமனை உறுதி செய்தது.

‘பீலே வரலாற்றில் தோன்றி சிறந்த விளையாட்டு வீரர் என்பதற்கு அப்பால் மேம்பட்டிருந்தார்’ என்று பிரேசில் கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அஞ்சலோட்ட சாதனைகளுடன் நிறைவடைந்த 2ஆம் நாள்

பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ பீலேவின் மரணத்திற்கு நாட்டில் மூன்று நாள் துக்கதினத்தை அறிவித்தார்.

பீலேவின் முன்னாள் கழகமான சான்டோஸ் அவரது இறுதிக் கிரியை பற்றிய விபரங்களை வெளியிட்டது. வரும் திங்கட்கிழமை அவரது உடல் மருத்துவமனையில் இருந்து கழகத்தின் எஸ்டாடியோ அர்பானோ கல்டைரா மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அங்கு மைதானத்தின் நடுவில் மக்கள் அஞ்சலிக்கா பூதவுடன் வைக்கப்படும்.

வரும் செவ்வாய்க்கிழமை குடும்ப இறுதிச் சடங்கிற்கு சாவோ போலோவில் உள்ள நான்டோஸ் வீதிகள் வழியாக பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

பீலே என்று பெரிதும் அறியப்படும் எட்சன் அரன்டஸ் டு நசிமென்டோ, 1958இல் சுவீடனில் நடந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் சம்பியனானதைத் தொடர்ந்தே 17 வயதான அவர் உலக நட்சத்திரமாக பிரபலம் பெற்றார். அந்த உலகக் கிண்ணத்தில் தனது திறமையால் நொக் அவுட் போட்டிகளில் வைத்து பிரேசில் ஆரம்ப அணியில் இடம்பிடித்தார்.

வேல்ஸுக்கு எதிரான காலிறுதியில் அவர் பெற்ற ஒரே கோலே பிரேசிலின் வெற்றியை உறுதி செய்தது. பிரான்ஸுக்கு எதிரான அரையிறுதியில் பீலே ஹட்ரிக் கோல் புகுத்த பிரேசில் 5–2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக பீலே தனது கழக மட்டப் போட்டிகளை ஆரம்பித்ததோடு அவர் கழக மட்டத்தில் மொத்தம் 643 கோல்களை புகுத்தியுள்ளார். கண்காட்சிப் போட்டிகளையும் சேர்த்து அவர் பெற்ற கோல்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியது.

LPL தொடரில் போட்டியின் போக்கை மாற்றிய துடுப்பாட்ட இன்னிங்ஸ்கள்!

1962ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஆடும்போது 21 வயதை எட்டியிருந்த பீலே மெக்சிகோவுக்கு எதிரான முதல் போட்டியில் அபார கோல் ஒன்றை புகுத்தி பிரேசிலின் வெற்றிக்குக் காரணமானதோடு, அடுத்த போட்டியில் காயம் காரணமாக ஆடவில்லை.

அந்த உலகக் கிண்ணத்தின் இறுதிக் கட்டப் போட்டிகளில் அவரது திமையை காயம் தடுத்தது. 1966 உலகக் கிண்ணத்தில் உபாதையால் அவரால் ஆட முடியாமல்போனது. எனினும் 1970 உலகக் கிண்ணத்தில் அவரது திறமை முழுமையாக வெளிப்பட்டது. இத்தாலிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பிரேசில் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியில் ஆரம்ப கோலை புகுத்தியவர் பீலே ஆவார்.