சர்வதேச லீக் T20 (ILT20) தொடரின் முன்னாள் சம்பியன்களில் ஒன்றான MI எமிரேட்ஸ் அணி, புதிய பருவத்திற்கான தொடரில் தமது குழாத்தினை பலப்படுத்த மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி சகலதுறைவீரர் கெய்ரோன் பொலார்ட் மற்றும் நிகோலஸ் பூரன் ஆகியோரை இணைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
>>ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ரோஹித் சர்மாவுக்கு முதலிடம்<<
MI நிர்வாகத்தில் காணப்படுகின்ற அதேநேரம் அதிக T20 லீக் பட்டங்களை (18) வென்ற வீரருமான பொல்லார்ட், 2024 ஆம் ஆண்டு ILT20 தொடரில் சம்பியன் பட்டம் வெல்லும் போது அந்த அணியில் வீரராக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் மேற்கிந்திய தீவுகள் அணியில் இணைக்கப்பட்டுள்ள மற்றைய வீரரான நிகோலஸ் பூரன், MI-நிர்வாகத்திற்கு சொந்தமான வேறு அணிகளுக்காகவும் விளையாடியிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் பூரானும், 2024 ஆம் ஆண்டு ILT20 தொடரினை MI-எமிரேட்ஸ் அணி வெற்றி கொள்ளும் போது அதன் வீரராக காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ILT20 தொடரின் நான்காவது பருவத்திற்கான போட்டிகள் டிசம்பர் 2ஆம் திகதி டுபாய் கெபிடல்ஸ் மற்றும் டேசட் வைப்பர்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதலுடன் தொடங்கவுள்ள நிலையில், MI எமிரேட்ஸ் அணி தனது ILT20 பயணத்தை டிசம்பர் 4ஆம் திகதி கல்ப் ஜயண்ட்ஸ் அணிக்கு எதிராக ஆரம்பிக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















