பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் உப தலைவர் மெஹிதி ஹாஸன் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளைாயடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுகயீனம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து மெஹிதி ஹாஸன் விலகியிருந்தார். அதேநேரம் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்களிலும் அணியுடன் இவர் இணைந்திருக்கவில்லை.
>>இரட்டைச்சதத்தினை தவறவிட்ட நிஸ்ஸங்க – மூன்றாம் நாள் இலங்கை வசம்<<
எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இவர் இணைவாரா? என்ற கேள்வி எழும்பியிருந்த நிலையில், அவர் மூன்றாவது நாள் பயிற்சிகளில் இணைந்துக்கொண்டார் என அணி முகாமையாளர் நபீட் இக்பால் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மெஹிதி ஹாஸன் சுகயீனத்திலிருந்து குணமடைந்துவருவதாகவும், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகுவார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பங்களாதேஷ் டெஸ்ட் அணிக்காக கடந்த காலங்களில் அதிகமான ஓட்டங்களை குவித்த வீரர் என்பதுடன், இறுதியாக நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியிருந்தார்.
அதுமாத்திரமின்றி இவருடைய சுழல் பந்துவீச்சும் அணிக்கு மேலும் பலம் கொடுக்கும் என்ற நிலையில், மெஹிதி ஹாஸனின் இழப்பு அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
மெஹிதி ஹாஸனுக்கு பதிலாக களமிறங்கியிருந்த அனாமுல் ஹக் பிஜோய் முதல் இன்னிங்ஸில் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<



















