சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்கிய மெதிவ் வேட்

35
Matthew Wade

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் T20I அணித்தலைவரும், அவ்வணியின் T20 உலகக் கிண்ண நாயகர்களில் ஒருவருமான விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் மெதிவ் வேட் சர்வதேச கிரிக்கெட்டுக்ககு பிரியாவிடை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.  

>>இலங்கையை வீழ்த்தி சம்பியனாகியது ஆப்கானிஸ்தான் A அணி!<<

36 வயது நிரம்பிய மெதிவ் வேட் கடந்த 2011ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணிக்காக சர்வதேச அறிமுகம் பெற்றிருந்தார். தனது அறிமுகத்தின் பின்னர் அவுஸ்திரேலிய அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகள், 97 ஒருநாள் மற்றும் 92 T20i போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் இறுதியாக பங்கேற்ற சர்வதேச தொடராக இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் அமைந்திருந்தது 

தனது ஓய்வு குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் மெதிவ் வேட் தான் அவுஸ்திரேலிய அணிக்காக ஆடியதனை கௌரவமாக கருதுவதாக குறிப்பிட்படிருப்பதோடு, தனது ஓய்வின் பின்னர் கிரிக்கெட் பயிற்சியாளராக அதிக கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார் 

அந்தவகையில் மெதிவ் வேட் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் விளையாடவிருக்கும் T20i தொடரில் அவுஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளர்களில் ஒருவராக செயற்படவிருப்பது குறிப்பிடத்தக்கது 

அதேநேரம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த போதும் மெதிவ் வேட் T20 லீக் போட்டிகளில் தொடர்ந்து ஆட எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<