ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரிற்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

160
Matt Fisher earns maiden call-up to NZ Test squad

ஜிம்பாப்வே அணியுடன் நடைபெறும் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கும் நியூசிலாந்தின் 15 பேர் அடங்கிய டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.   

>>ஒருநாள் தொடரினையும் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி<<

நியூசிலாந்து அணியானது ஜிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே முக்கோண T20i தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் என்பவற்றில் பங்கெடுக்கின்றது 

இந்த சுற்றுப்பயணத்தில் T20i தொடரின் பின்னர் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது 

இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் குழாத்தில் முன்னணி வீரர்களான கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன் மற்றும் மைக்கல் பிரஸ்வெல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் அறிமுக வீரரான வேகப்பந்துவீச்சாளர் மேட் பிஸ்சர் இணைக்கப்பட்டுள்ளார் 

மேட் பிஸ்சர் வெறும் 14 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுக்களை 24.11 என்கிற சராசரியுடன் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இவருக்கு மேலதிகமாக அறிமுக வீரராக ஜேக்கப் டப்பியும் உள்வாங்கப்பட்டுள்ளார்.   

>>ILT20 தொடரில் களமிறங்கும் எட்டு இலங்கை வீரர்கள்<<

அதேவேளை இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் பின்னர் முதன் முறையாக சுழல்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேலுக்கு நியூசிலாந்தின் டெஸ்ட் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. உபாதை காரணமாக பென் சீர்ஸ் ஜிம்பாப்வே தொடரில் பங்கெடுக்கும் வாய்ப்பினை இழக்கின்றார் 

ஜிம்பாப்வேநியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது ஜூலை 30ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 7ஆம் திகதி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இரண்டு டெஸ்ட் போட்டிகளும் புலவாயோவில் நடைபெறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். 

நியூசிலாந்து குழாம் 

டொம் லேதம் (தலைவர்), டொம் பிலன்டல், டேவோன் கொன்வெய், ஜேக்கப் டப்பி, மேட் பிஸ்சர், மேட் ஹென்ரி, டேரைல் மிச்சல், ஹென்ரி நிக்கோல்ஸ், வில் ரூர்க்கே, அஜாஸ் படேல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிச்சல் சான்ட்னர், நதன் ஸ்மித், வில் யங்  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<