நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்திலிருந்து விலகிய மார்டின் கப்டில்

New Zealand Cricket

366

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்திலிருந்து அனுபவ துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்டில் விடுவிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மார்டின் கப்டில் சர்வதேசத்தில் விளையாடுவதற்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் முகமாக நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியிருந்தார்.

>> புதிய வடிவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணம் 2024!

இந்தநிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் சபை உடனடியாக அவர் ஒப்பந்தத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மார்டின் கப்டில் நடைபெற்றுமுடிந்த T20 உலகக்கிண்ணத்தில் அணியில் இணைக்கப்பட்டிருந்த போதும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இந்திய தொடரிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பின் எலன் நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பயன்படுத்தப்பட்டு வருகின்றார்.

>> LPL தொடரில் புதிய வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பா? கூறும் சமந்த டொடன்வெல!

எனவே, அணியின் ஒப்பந்தத்திலிருந்து விலகி, விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் களமிறங்குவதற்கு கப்டில் எதிர்பார்த்துள்ளார். எவ்வாறாயினும், நியூசிலாந்து அணிக்கு தேவையான நேரங்களில் விளையாட காத்திருப்பதாகவும் கப்டில் குறிப்பிட்டுள்ளார்.

மார்டின் கப்டில் ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ள நிலையில், மாற்று வீரர் ஒருவர் ஒப்பந்தத்தில் இணைக்கப்படுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதற்கு முதல் டிரெண்ட் போல்ட் மற்றும் கொலின் டி கிரெண்டோம் ஆகியோர் நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்திலிருந்து விலகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<