இலங்கை மற்றும் இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ICC T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணி நீக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக இந்தியா செல்ல முடியாது என பங்களாதேஷ் அறிவித்திருந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் போட்டிகளை இந்தியாவிலிருந்து நகர்த்த முடியாது என தெரிவித்திருந்தது.
>>இந்தியாவில் விளையாடுமாறு பங்களாதேஷிடம் ICC கோரிக்கை<<
இறுதிக்கட்ட சந்திப்பில் இந்தியாவில் விளையாட வேண்டும் எனவும், அதனை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் பங்களாதேஷ் அணி ஐசிசி T20 உலகக்கிண்ணத்திலிருந்து நீக்கப்படும் என ICC அறிவித்திருந்தது. அதேநேரம் இதற்காக 24 மணிநேரம் கால அவகாசத்தையும் ஐசிசி பங்களாதேஷ் அணிக்கு கொடுத்திருந்தது.
எனினும் பங்களாதேஷ் அணி இந்தியாவில் விளையாட முடியாது என திட்டவட்டமாக கூறிய நிலையில், ஐசிசி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. அதேநேரம் ஐசிசி T20 தரவரிசையின் அடிப்படையில் ஸ்கொட்லாந்து அணி T20 உலகக்கிண்ணத்தில் விளையாடும் எனவும் சுட்டிகாட்டியுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<






















