ரக்பி போட்டிகளில் வரலாறு படைத்த மடவளை மதீனா கல்லூரி

330

டயலொக் பாடசாலைகள் ரக்பி (DSR) தொடரின் டிவிஷன் – II பாடசாலைகளில் ஒன்றான கண்டி மடவளை தேசிய கல்லூரி அணியானது இந்தப் பருவத்திற்காக தாம் விளையாடிய இறுதி லீக் மோதலில் ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி அணியினை 31-17 என வீழ்த்தியிருக்கின்றது.   

Watch – ரக்பியில் அசத்தி வரும் மடவளை மதீனா கல்லூரி | Youth Plus Episode 03

திகனவில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற மோதலில் ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரியை வீழ்த்திய மதீனா அணியானது இந்தப் பருவத்தில் தாம் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரினை நிறைவு செய்வதோடு, வரலாற்றில் முதல் தடவையாக டிவிஷன்-I (C-Segment) அணியாகவும் அடுத்த பருவத்திற்கான தொடரில் தரமுயர்த்தப்பட்டுள்ளது 

மிகவும் தீர்மானம் கொண்ட மடவளைராஜகிரிய பாடசாலைகள் இடையிலான மோதலில் இரு அணிகளும் தொடரில் தோல்வியினை காணாத அணிகளாக களமிறங்கியிருந்தன 

தொடக்கம் முதலே போட்டியில் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தியிருக்க போட்டியின் முதல் ட்ரையானது மதீனா வீரர்கள் மூலம் பெறப்பட்டாலும், பதிலுக்கு ஜனாதிபதி கல்லூரி வீரர்கள் மூலமும் புள்ளிகள் பெறப்பட்டது. அதிக விறுவிறுப்பிற்கு மத்தியில் நகர்ந்த முதல் பாதியினை பின்னர் மடவளை அணியினர் 21-12 எனக் கைப்பற்றினர் 

விரைகதியில் நடைபெற்ற போட்டியின் இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் மேலதிக புள்ளிகளைப் பெறுவதற்காக முயற்சித்த நிலையில், சிறப்பான பின்களத்துடன் காணப்பட்ட மதீனா அணியானது ஆட்டத்தில் இம்முறை மேலதிகமாக 10 புள்ளிகளைப் பெற்று போட்டியில் 31-17 என வெற்றியினைப் பதிவு செய்து கொண்டது 

இப்போட்டியின் வெற்றியோடு தரமுயர்த்தப்பட்டுள்ள மடவளை மதீனா கல்லூரி அணியானது மிகக் குறுகிய கால இடைவெளியில் இந்த அடைவுமட்டத்திற்குச் சென்றிருப்பது சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும் 

>>மேலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்க<<