ஜப்னா ஸ்டாலியன்ஸின் புதிய உரிமையாளராக லைக்காவின் அல்லிராஜா சுபாஸ்கரன்

3418

லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் ஆடும் அணிகளில் ஒன்றான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் புதிய  உரிமையாளராக இலங்கையினைப் பிறப்பிடமாக கொண்ட பிரித்தானிய தொழிலதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் மாறியிருக்கின்றார்.

காலியில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரினை ஆரம்பிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

லைக்கா குழும நிறுவனத்தின் தலைவரான அல்லிராஜா சுபாஸ்கரன் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளராக மாறியிருக்கும் விடயத்தினை, LPL தொடரின் ஏற்பாட்டு நிறுவனமான IPG நிறுவனம் உறுதி செய்திருக்கின்றது.

அதேநேரம் LPL தொடரில் இணைந்தது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் லைக்கா குழும நிறுவன உரிமையாளரான அல்லிராஜா சுபாஸ்கரன், கிரிக்கெட்டில் முக்கிய தொடர்களில் ஒன்றாக மாறும் என தான் நம்பும் LPL தொடரில் தான் (அணியொன்றின் உரிமையாளராக மாறி) இணைவது குறித்து சந்தோஷமடைவதாக தெரிவித்திருக்கின்றார்.

கடந்த ஆண்டு முதல்முறையாக நடைபெற்ற LPL தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, இம்முறை தமது புதிய உரிமையாளரின் கீழ் அடுத்த மாதம் நடைபெறவுள்ள LPL தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் போது பல நட்சத்திர வீரர்களை கொள்வனவு செய்யும் என அறியக்கிடைக்கின்றது.

IPL இல் புதிய மைல்கல்லை எட்டிய கோஹ்லி, ஹர்ஷல்

இந்த ஆண்டு இரண்டாவது பருவகாலத்திற்கான LPL தொடரின் போட்டிகள் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…