தம்புள்ளை தண்டர்ஸ் அணியை நீக்கிய இலங்கை கிரிக்கெட்

81

இந்த பருவத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் தொடரில் ஆடவிருந்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் ஒப்பந்தத்தினை உடனடி அமலாகும் வரும் வரையில் நீக்கி இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.

>>ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு ஆலோசகராகும் டுவைன் பிராவோ

நேற்று (22) 2024 ஆம் ஆண்டுக்கான LPL தொடரின் வீரர்கள் ஏலம் நடைபெற்றிருந்தது. இந்த ஏலத்தினை தொடர்ந்து தம்புள்ளை  தண்டர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பங்களாதேஷினைச் சேர்ந்த தமிம் ரஹ்மான் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

ரஹ்மானின் கைதினை அடுத்தே இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் LPL தொடரின் ஏற்பாட்டுக் குழு என்பன தம்புள்ளை தண்டர்ஸ் அணியுடனான தமது ஒப்பந்தத்தினை நீக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் தம்புள்ளை தண்டர்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டதற்கான முழுமையான காரணங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில் அவர் ஆட்டநிர்ணய (Match Fixing) குற்றச்சாட்டுக்காக கைதாகியிருப்பதாக இந்தியாவின் Cricbuzz செய்தி இணையதளம் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த ஆண்டுக்கான LPL தொடரிலேயே தம்புள்ளை தண்டர்ஸ் அணி புதிதாக இணைந்திருந்த நிலையில் அவ்வணிக்காக இனி புதிய உரிமையாளர் ஒருவர் கிடைக்காத போதிலும், இந்த ஆண்டிலும் தொடரினை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க எதிர்பார்த்துள்ளதாக தொடரின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

LPL தொடர் இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக ஜூலை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, தொடரின் நடப்புச் சம்பியன்களாக பி-லவ் கண்டி அணி காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<