Home Tamil இறுதி குழுநிலைப் போட்டியில் வெற்றி பெற்ற தம்புள்ளை ஓரா

இறுதி குழுநிலைப் போட்டியில் வெற்றி பெற்ற தம்புள்ளை ஓரா

155
Galle Gladiators vs Dambulla Aura

இந்தப் பருவகாலத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் கடைசி குழுநிலைப் போட்டியில் தம்புள்ளை ஓரா அணி 4 விக்கெட்டுக்களால் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியினை வீழ்த்தியிருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் தம்புள்ள ஓரா அணி தொடரில் இரண்டாவது வெற்றியினைப் பதிவு செய்த போதும், நிகர ஓட்டவித்தியாசம் (NRR) காரணமாக தொடரின் பிளே ஒப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினை இழக்கின்றது.

>> அபீப், பினுரவின் பிரகாசிப்புடன் ஜப்னா அணிக்கு வெற்றி

மறுமுனையில் இப்போட்டியில் தோல்வியினை தழுவிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணியும் தொடரில் இரண்டு வெற்றிகளுடன் காணப்பட்ட போதும் சிறந்த நிகர ஓட்ட வித்தியாசம் காரணமாக கண்டி பல்கொன்ஸ், ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து தொடரின் பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாகுகின்றது.

LPL தொடரின் 20ஆவது போட்டியாக அமைந்த இந்த மோதல் நேற்று (19) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குசல் மெண்டிஸ் தலைமையிலான கோல் கிளேடியேட்டர்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.

பின்னர் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த கோல் கிளேடியேட்டர்ஸ் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுத்த போதும் நுவனிது பெர்னாண்டோவின் அதிரடி அரைச்சதம் கைகொடுக்க 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து அவ்வணி 129 ஓட்டங்களை எடுத்தது.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் நுவனிது பெர்னாண்டோ இறுதி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

மறுமுனையில் தம்புள்ளை ஓரா அணியின் பந்துவீச்சு சார்பில் மெதிவ் போர்டே வெறும் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட130 ஓட்டங்களை பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ளை ஓரா அணி அந்த வெற்றி இலக்கை மெதிவ் போர்டின் அதிரடி அரைச்சதத்தோடு வெறும் 14.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து அடைந்தது.

தம்புள்ளை ஓரா அணியின் துடுப்பாட்டம் சார்பாக மெதிவ் போர்டே 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களைப் பெற்றிருக்க, ஜோர்டன் கொக்ஸ் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் உடன் 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

>> இரண்டாவது டெஸ்ட்டில் இருந்தும் விலகும் ரோஹித் சர்மா

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் நுவான் துஷார மற்றும் இமாத் வஸீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக தம்புள்ளை ஓரா அணி வீரரான மெதிவ் போர்டே தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இனி LPL தொடரின் பிளே ஒப் சுற்றுக்கான போட்டிகள் நாளை (21) தொடக்கம் ஆரம்பமாகுகின்றன.

போட்டியின் சுருக்கம்

Result


Galle Gladiators
129/8 (20)

Dambulla Aura
134/6 (14.2)

Batsmen R B 4s 6s SR
Thanuka Dabare c Lahiru Madushanka b Matthew Forde 7 12 1 0 58.33
Kusal Mendis c Sikandar Raza b Matthew Forde 17 15 2 0 113.33
Oshada Fernando lbw b Matthew Forde 0 1 0 0 0.00
Asad Shafiq c Matthew Forde b Lahiru Madushanka 6 8 1 0 75.00
Azam Khan b Dilum Sudeera 15 21 0 1 71.43
Nuwanidu Fernando not out 63 42 3 5 150.00
Imad Wasim c Sikandar Raza b Noor Ahmad  3 7 0 0 42.86
Nimesh Vimukthi lbw b Sikandar Raza 5 5 0 0 100.00
Wahab Riaz c Dilum Sudeera b Matthew Forde 3 4 0 0 75.00
Nipun Malinga not out 3 6 0 0 50.00


Extras 7 (b 0 , lb 4 , nb 1, w 2, pen 0)
Total 129/8 (20 Overs, RR: 6.45)
Bowling O M R W Econ
Pramod Madushan 2 0 11 0 5.50
Lahiru Madushanka 3 0 16 1 5.33
Chamindu Wickramasinghe 2 0 22 0 11.00
Matthew Forde 4 0 11 4 2.75
Noor Ahmad  4 0 17 1 4.25
Sachitha Jayathilake 1 0 3 0 3.00
Dilum Sudeera 2 0 14 1 7.00
Sikandar Raza 2 0 31 1 15.50


Batsmen R B 4s 6s SR
Shevon Daniel b Nuwan Thushara 2 4 0 0 50.00
Jordan Cox c & b Nimesh Vimukthi 34 21 3 2 161.90
Lasith Croospulle c Nimesh Vimukthi b Nuwan Thushara 4 4 1 0 100.00
Matthew Forde run out (Azam Khan) 52 30 6 2 173.33
Sikandar Raza c Thanuka Dabare b Imad Wasim 17 7 0 2 242.86
Lahiru Madushanka not out 10 10 0 0 100.00
Chamindu Wickramasinghe c Nuwan Thushara b Imad Wasim 2 5 0 0 40.00
Sachitha Jayathilake not out 7 5 0 1 140.00


Extras 6 (b 0 , lb 2 , nb 0, w 4, pen 0)
Total 134/6 (14.2 Overs, RR: 9.35)
Bowling O M R W Econ
Nuwan Thushara 4 0 42 2 10.50
Wahab Riaz 4 0 36 0 9.00
Imad Wasim 3.2 0 32 2 10.00
Nimesh Vimukthi 2 0 17 1 8.50
Nipun Malinga 1 0 5 0 5.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<