லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் ஆறாவது பருவகாலத்திற்கான வீரர்கள் வரைவு எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவின் போது அணிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களை தங்களுடைய அணிக்காக இணைக்க முடியும்.
தசுன் ஷானக்கவின் அதிரடியோடு T20I தொடரை சமநிலை செய்த இலங்கை
கடந்த 2022ஆம் ஆண்டுக்கு பின்னர் LPL தொடரில் வீரர்கள் ஏலம் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது மீண்டும் வீரர்கள் வரைவை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளது.
LPL தொடரானது இவ்வருடம் ஜூலை 8ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<





















