Home Tamil சோல்ட், தரிந்து மற்றும் ஷட்ரானின் பிரகாசிப்புடன் ஜயண்ட்ஸ் அணிக்கு 2வது வெற்றி

சோல்ட், தரிந்து மற்றும் ஷட்ரானின் பிரகாசிப்புடன் ஜயண்ட்ஸ் அணிக்கு 2வது வெற்றி

Lanka Premier League 2021

963

ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மோசமான துடுப்பாட்டத்தால் படுதோல்வியினை சந்தித்திருந்த தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி, இன்றைய (08) கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 195 ஓட்டங்களை குவித்தது மாத்திரமின்றி, 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியையும் பதிவுசெய்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) 6வது போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிகள் மோதியிருந்தன. கொழும்பு ஸ்டார்ஸ் அணி, தாங்கள் விளையாடிய ஒரு போட்டியில் வெற்றிபெற்ற நிலையில் களமிறங்கியதுடன், தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி என இன்றைய போட்டியில் களமிறங்கியிருந்தது.

>>இரண்டாவது வெற்றியினைப் பதிவு செய்த கோல் கிளேடியட்டர்ஸ்

தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த போதும், ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

ஜயண்ட்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சோபித்தால், சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில், இன்றைய தினம் பில் சோல்ட் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல மிக அபாரமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்காக இவர்கள் 3.3 ஓவர்களில் 57 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதுடன், டிக்வெல்ல 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருப்பினும், சோல்டின் அற்புதமான துடுப்பாட்டத்தால், 3 விக்கெட்டுகள் இழக்கப்பட்டும், தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி 75 ஓட்டங்களை பவர்-பிளே ஓவர்களில் பெற்றுக்கொண்டது.

பில் சோல்ட் தன்னுடைய இரண்டாவது அரைச்சதத்தை பதிவுசெய்து, 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, துஷ்மந்த சமீரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சோல்ட் ஆட்டமிழக்கும் போது, 100 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போதும், அணித்தலைவர் தசுன் ஷானக மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நஜிபுல்லாஹ் ஷட்ரான் ஆகியோர் 5வது விக்கெட்டுக்காக 77 ஓட்டங்களை பகிர, தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஜயண்ட்ஸ் அணிக்காக ஷட்ரான் 40 பந்துகளில் 54 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, தசுன் ஷானக 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில், ஜயண்ட்ஸ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான ஷர்டான், சோல்ட் மற்றும்  ஷானக ஆகியோரை ஆட்டமிழக்கச்செய்த துஷ்மந்த சமீர, 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

மறுமுனையில் தங்களுடைய துடுப்பாட்ட இன்னிங்ஸை டொம் பெண்டனின் வேகமான ஓட்டக்குவிப்புடன் கொழும்பு ஸ்டார்ஸ் அணி ஆரம்பித்திருந்த போதும், தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் போட்டியின் திசையை மாற்றத்தொடங்கினர்.

கொழும்பு ஸ்டார்ஸ் அணி 2.4 ஓவர்களில் 26 ஓட்டங்களை அடித்து வேகமான ஆரம்பத்தை பெற்றிருந்த போதும், தரிந்து ரத்நாயக்க, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோர் இணைந்து சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை கைப்பற்ற தொடங்கினர். எனவே, தங்களுடைய முதல் 5 விக்கெட்டுகளையும் 10.4 ஓவர்களில் 78 ஓட்டங்களுக்கு கொழும்பு ஸ்டார்ஸ் அணி இழந்தது.

எனினும், சந்திமால் மற்றும் தனன்ஜய டி சில்வா இணைந்து சிறிய இணைப்பாட்டமொன்றை பகிர்ந்தனர். இவர்கள் இருவரும் 20 பந்துகளுக்கு 36 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனன்ஜய டி சில்வா 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, கீமோ போலுடன் இணைந்து சந்திமால் மீண்டுமொரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பினார். இதில், சந்திமால் தாஹீரின் ஓவருக்கு 2 சிக்ஸர்களையும், கீமோ போல் நுவான் பிரதீப்பின் ஓவருக்கு ஒரு சிக்ஸர் மற்றும் பௌண்டரியையும் விளாச, மீண்டும் கொழும்பு ஸ்டார்ஸ் அணி போட்டிக்குள் நுழைந்தது.

இருப்பினும், கீமோ போல் அதே ஓவரில் ஆட்டமிழக்க, சாமிக்க வீசிய அடுத்த ஓவரில் சந்திமால் 26 ஓட்டங்களுடன் வெளியேறினார். இறுதியில், சீகுகே பிரசன்ன 18 ஓட்டங்களையும், துஷ்மந்த சமீர 15 ஓட்டங்களையும் வேகமாக பெற்றுக்கொடுத்தாலும், முதல் 10 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

எனவே, இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக, மூன்று போட்டிகளில் தங்களுடைய இரண்டாவது வெற்றியை தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி பெற்றுக்கொண்டது. இதேவேளை, இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள கொழும்பு ஸ்டார்ஸ் அணி தங்களுடைய முதல் தோல்வியை இன்றைய தினம் சந்தித்துள்ளது. அதுமாத்திரமின்றி, கோல் கிளேடியேட்டர்ஸ் அணியுடன் நான்கு புள்ளிகளை பகிர்ந்துக்கொண்டிருக்கும், தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கும் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Result


Colombo Stars
177/10 (18.5)

Dambulla Aura
195/6 (20)

Batsmen R B 4s 6s SR
Phil Salt c Dushmantha Chameera b Keemo Paul 62 34 8 2 182.35
Niroshan Dickwella c Dhananjaya de Silva b Keemo Paul 17 6 4 0 283.33
Dilshan Munaweera, c Tom Banton b Akila Dananajaya 3 3 1 0 100.00
Sohaib Maqsood c Seekkuge Prasanna b Sherfane Rutherford 1 3 0 0 33.33
Najibullah Zadran c Dushmantha Chameera b Seekkuge Prasanna 54 40 6 2 135.00
Dasun Shanaka c Dushmantha Chameera b Seekkuge Prasanna 38 25 3 2 152.00
Chamika Karunaratne b 12 8 1 0 150.00
Ramesh Mendis b 0 1 0 0 0.00


Extras 8 (b 0 , lb 0 , nb 2, w 6, pen 0)
Total 195/6 (20 Overs, RR: 9.75)
Fall of Wickets 1-57 (3.3) Niroshan Dickwella, 2-65 (4.2) Dilshan Munaweera,, 3-69 (5.2) Sohaib Maqsood, 4-100 (10.2) Phil Salt, 5-177 (18.1) Dasun Shanaka, 6-182 (18.4) Najibullah Zadran,

Bowling O M R W Econ
Dhananjaya de Silva 1 0 15 0 15.00
Dushmantha Chameera 4 0 34 3 8.50
Naveen Ul Haq 4 0 37 0 9.25
Keemo Paul 3 0 48 1 16.00
Akila Dananajaya 4 0 37 1 9.25
Seekkuge Prasanna 4 0 21 1 5.25


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Phil Salt b Ramesh Mendis 12 13 1 0 92.31
Tom Banton b Tharindu Rathnayake 23 14 4 1 164.29
Kusal Perera b Imran Tahir 20 11 2 2 181.82
Sherfane Rutherford b Tharindu Rathnayake 16 18 2 0 88.89
Naveen Ul Haq c Nuwan Pradeep b Imran Tahir 3 6 0 0 50.00
Dinesh Chandimal c Chamika Karunaratne b Dasun Shanaka 26 16 2 2 162.50
Dhananjaya de Silva c Tharindu Rathnayake b Nuwan Pradeep 21 13 3 0 161.54
Keemo Paul c Sachindu Colambage b Nuwanidu Fernando 11 6 1 1 183.33
Seekkuge Prasanna lbw b Nuwan Pradeep 17 8 0 2 212.50
Dushmantha Chameera c Niroshan Dickwella b Chamika Karunaratne 15 7 1 1 214.29
Akila Dananajaya b 2 1 0 0 200.00


Extras 11 (b 0 , lb 2 , nb 0, w 9, pen 0)
Total 177/10 (18.5 Overs, RR: 9.4)
Fall of Wickets 1-26 (2.4) Tom Banton, 2-52 (4.6) Kusal Perera, 3-71 (8.4) Pathum Nissanka, 4-74 (9.5) Sherfane Rutherford, 5-78 (10.4) Naveen Ul Haq, 6-114 (13.6) Dhananjaya de Silva, 7-137 (15.4) Keemo Paul, 8-145 (16.6) Dinesh Chandimal, 9-163 (17.5) Seekkuge Prasanna, 10-177 (18.5) Dushmantha Chameera,

Bowling O M R W Econ
Chamika Karunaratne 3.5 0 46 2 13.14
Nuwan Pradeep 4 0 50 3 12.50
Tharindu Rathnayake 4 0 17 2 4.25
Ramesh Mendis 3 0 26 1 8.67
Imran Tahir 4 0 36 2 9.00



>>மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு<<