ஹொங் கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசியக்கிண்ணத் தொடரில் ஹொங் கொங் அணி விளையாடவுள்ள நிலையில், அந்த அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கௌஷால் சில்வா செயற்படவுள்ளார்.
>>2025ஆம் ஆண்டின் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுவது உறுதி<<
கௌஷால் சில்வா 2011ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை இலங்கை அணிக்காக 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர் இலங்கை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் சென்று அணிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையின் முதற்தர கிரிக்கெட்டில் 209 போட்டிகளில் விளையாடி 41 சதங்கள் அடங்கலாக 13922 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
கௌஷால் சில்வாவின் பயிற்றுவிப்பின் கீழ் ஆசியக்கிண்ண குழு B இல் விளையாடவுள்ள ஹொங் கொங் அணியானது ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<