இம்மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஆரம்பமாகும் ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>பாக். T20I அணியிலிருந்து பாபர், ரிஸ்வான், ஷஹீன் அப்ரிடி அதிரடி நீக்கம்<<
இம்மாதம் 29ஆம் திகதி இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் பங்கெடுக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய இராச்சியத்தில் ஆரம்பமாகுகின்றது. இந்த ஒருநாள் தொடரில் இருந்தே ஜொப்ரா ஆர்ச்சர் கட்டை விரல் உபாதை காரணமாக விலகியிருக்கின்றார்.
30 வயது நிரம்பிய ஆர்ச்சர் இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் உடன் கடந்த 04ஆம் திகதி கொல ஆடிய போட்டியில் உபாதைக்கு முகம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் ஜொப்ரா ஆர்ச்சரின் பிரதியீட்டு வீரராக இங்கிலாந்து அணியில் லங்கசைர் வேகப்பந்துவீச்சாளர் லூக் வூடிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. கடந்த 2022ஆம் ஆண்டு ஒருநாள் அறிமுகம் பெற்ற லூக் வூட் இறுதியாக கடந்த 2023ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டியொன்றில் ஆடியிருந்தார்.
இதேநேரம் ஜொப்ரா ஆர்ச்சரின் உபாதை தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அடுத்த இரண்டு வாரங்களில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு அவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பும் காலம் தொடர்பில் தகவல்களை வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<