சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் ஜீவன் மெண்டிஸ்

Sri Lanka Cricket

1248

இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக நேற்றைய தினம் (27) அறிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார்.

BPL தொடரில் ஒன்பது இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு

ஜீவன் மெண்டிஸ் இலங்கை அணிக்காக 58 ஒருநாள் மற்றும் 22 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இடதுகை துடுப்பாட்ட வீரர் மற்றும் சுழல் பந்துவீச்சாளரான இவர், இறுதியாக கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணிசார்பில் விளையாடினார். இதில், தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இறுதியாக விளையாடியிருந்தார்.

ஜீவன் மெண்டிஸ் கடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் 2019ம் ஆண்டுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் 28 விக்கெட்டுகளையும், T20I போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதுமாத்திரமின்றி துடுப்பாட்டத்தில், ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைச்சதம் அடங்கலாக 636 ஓட்டங்களையும், T20I போட்டிகளில் 207 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

அதேநேரம், இலங்கையின் முதற்தர போட்டிகளில் மிகச்சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியுள்ள இவர் 164 போட்டிகளில் 7883 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 365 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதேவேளை, ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், ஏனைய போட்டிகளில் விளையாட தாயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<