இலங்கைக்கு எதிரான தொடரில் களமிறங்கும் ஜஸ்ப்ரிட் பும்ரா!

Sri Lanka tour of India 2023

182

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய குழாத்தில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா இணைக்கப்பட்டுள்ளார்.  

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20i மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

“இந்திய தொடர் புதிய வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு” – ஷானக!

கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து முதுகுப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஜஸ்ப்ரிட் பும்ரா இந்திய அணிக்காக விளையாடவில்லை. அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற T20i தொடரின்போது இவர் உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். இதன்காரணமாக T20 உலகக் கிண்ணத் தொடரிலும் இவர் விளையாடவில்லை.

இலங்கை தொடருக்கான குழாத்தை அறிவிப்பதற்கு முன்னர் ஜஸ்ப்ரிட் பும்ரா உடற்தகுதியை பெற்றிருந்தாலும், உபாதை அச்சத்தால் தேர்வுக்குழுவினர் அவரை அணியில் இணைக்கவில்லை.

எனினும், தற்போது இலங்கை அணிக்கு எதிராக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பும்ரா இணைக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் இவர் T20i குழாத்தில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஒருநாள் குழாம்

ரோஹித் சர்மா (தலைவர்), ஹர்திக் பாண்டியா, விராட் கோஹ்லி, கே.எல். ராஹுல், சிரேயாஸ் ஐயர், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், இசான் கிஷன், வொசிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், அக்ஸர் பட்டேல், உம்ரான் மலிக், அர்ஷ்டீப் சிங், மொஹமட் சமி, மொஹமட் சிராஜ், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<