இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறும் கெயல் ஜெமிசன்!

England tour of New Zeland 2023

110

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கெயல் ஜெமிசன் வெளியேறியுள்ளார்.

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

முதல் ஒருநாள் போட்டிக்கான இலங்கை A குழாம் அறிவிப்பு

கெயல் ஜெமிசனின் முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின்போது, இவருக்கு முதுகுப்பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து அவர் இறுதியாக நடைபெற்ற சுபர் ஸ்மேஷ் தொடரில் விளையாடியிருந்தாலும், மீண்டும் அவருக்கு உபாதை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் அணியிலிருந்து நீக்கப்படுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கெயல் ஜெமிசன் இரண்டு போட்டிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் மெட் ஹென்ரி முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். மெட் ஹென்ரியின் மனைவி முதல் குழந்தையை பிரசவிக்கவுள்ளதால் முதல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

மேற்குறித்த இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் அணியிலிருந்து வெளியேறியுள்ளபோதும், ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களில் விளையாடியுள்ள ஜேகப் டஃபி வேகப்பந்துவீச்சாளராக நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<