யாழ். மாவட்டத்தில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜப்னா வொலிபோல் லீக் (Jaffna Volleyball League) தொடர், மறு அறிவித்தல் இன்றி ஒத்திவைக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தை பிரதநிதித்துவப்படுத்தும் கரப்பந்தாட்ட வீரர்களை, ஏல முறையில் அணிகளில் இணைத்து முதன்முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜப்னா வொலிபோல் லீக் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
>>விறுவிறுப்புடன் ஆரம்பித்த ஜப்னா வொலிபோல் லீக்!
இந்தநிலையில், யாழ் குடா நாட்டில் அதிகரித்துவரும் கொவிட்-19 தொற்று பரவலினை கருத்திற்கொண்டு, தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகப்பொறுப்பினை உணர்ந்து அனைவரினதும் நலன்கருதி Jaffna Volleyball League போட்டித் தொடரானது மறு அறிவித்தல் இன்றி பிற்போடப்படுவதாக யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில், யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ரவிவர்மன் கருத்து வெளியிடுகையில், “யாழ் குடா நாட்டில் கடந்த இரு நாட்களில் பல covid 19 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், எமக்கு இருக்கும் சமூகப்பொறுப்பினை உணர்ந்தும் வீரர்கள், அணி அலுவலர்கள் மத்தியஸ்தர்கள் என அனைவரினதும் பாதுகாப்பைக்கருதி Jaffna Volleyball League போட்டித்தொடரானது மறு அறிவித்தல் இன்றி பிற்போடப்படுகின்றது.
>>Legends தொடரில் Dilshan & Co படைத்த சாதனைகள்..!
அடுத்து வருகின்ற வார இறுதி நாட்களில் போட்டிகளினை மூடிய போட்டிகளாக (ரசிகர்களிற்கு அனுமதியின்றி) இறுக்கமான சுகாதார நடைமுறைகளினை பின்பற்றி தீர்மானிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
ஜப்னா வொலிபோல் லீக் தொடரின் முதல் நாள் நடைபெற்ற போட்டிகளில், ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ், வல்வையூர் வொலி வொரியர்ஸ், ரைசிங் ஐலண்ட்ஸ் மற்றும் நீர்வை பசங்க ஆகிய அணிகள் வெற்றிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<




















