சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை பிரதிநிதி பதினொருவர் அணி, ஆகியவற்றுக்கிடையே கட்டுநாயக்கவில் இன்று (2) இடம்பெற்று முடிந்திருக்கும் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.
நேற்று (2) தொடங்கியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து A அணியின் தலைவரான ஹர்ரி டெக்டர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தெரிவு செய்தார்.
அணியின் வீழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற வீரர்கள் காரணமில்லை ; மாலிங்க
சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி கடந்த மூன்று வருடங்களாக அடைந்து…
இதன்படி முதலில் துடுப்பாடிய அயர்லாந்து A அணி, 53.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 159 ஓட்டங்களையே பெற்றது.
அயர்லாந்து A அணியின் துடுப்பாட்டத்தில் ஹர்ரி டெக்டர் 5 பெளண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களை குவிக்க, இலங்கை கிரிக்கெட் சபை பிரதிநிதி பதினொருவர் அணி பந்துவீச்சில் மகேஷ் தீக்ஷன மற்றும் தரிந்து கெளஷால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
இதன் பின்னர், போட்டியில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த இலங்கை கிரிக்கெட் சபை பிரதிநிதி பதினொருவர் அணிக்கு தேசிய அணி வீரரான சந்துன் வீரக்கொடி அதிரடியான முறையில் துடுப்பாடி ஓட்டங்கள் சேர்த்தார். 86 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சந்துன் வீரக்கொடி 93 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபை பிரதிநிதி பதினொருவர் அணியின் தலைவரான ஹஷான் துமிந்துவும் ஆட்டமிழக்காமல் அரைச்சதம் ஒன்றினை தாண்டி 74 ஓட்டங்களை குவித்திருந்தார்.
Photos: Sri Lanka A Team vs Ireland A Team | Warm-up Match | Day 2
இவர்களது துடுப்பாட்ட உதவியுடன் இலங்கை கிரிக்கெட் சபை பிரதிநிதி பதினொருவர் அணி 313 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.
அயர்லாந்து அணியின் பந்துவீச்சில் ஹர்ரி டெக்டர் மற்றும் ஜொனதன் கார்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.
இதனை தொடர்ந்து போட்டியின் இன்றைய இரண்டாம் நாளில், இலங்கை கிரிக்கெட் சபை பிரதிநிதி பதினொருவர் அணியினை விட 154 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அயர்லாந்து A அணி, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்து போட்டி சமநிலைக்கு வரும் போது 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.
அயர்லாந்து A அணியின் துடுப்பாட்டத்தில் ஜேம்ஸ் மெக்கொல்லம் 31 ஓட்டங்கள் பெற்றிருக்க, இலங்கை கிரிக்கெட் சபை பிரதிநிதி பதினொருவர் அணியின் பந்துவீச்சில் கலன பெரேரா, அக்தாப் காதர், துஷான் விமுக்தி மற்றும் கல்ஹார சேனாரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
குசல் மெண்டிஸுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்கிறார் சந்திமால்
நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவினாலும்…
இலங்கை கிரிக்கெட் சபை பிரதிநிதி பதினொருவர் அணி – அயர்லாந்து A அணி இடையிலான பயிற்சிப் போட்டி சமநிலையில் முடித்திருக்கின்ற இத்தருணத்தில், அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவற்றுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் சனிக்கிழமை (5) ஆரம்பமாகின்றது.
ஸ்கோர் விபரம்
போட்டி முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.




















