கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் இந்தியன் ப்ரீமியர் லீக்

349
Courtesy - BCCI

சர்வதேச போட்டிகளுக்கு நிகரான கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) T20 தொடர் இந்த ஆண்டு 12ஆவது முறையாக நடைபெறவுள்ளது.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை (24) சென்னையில் இடம்பெறும் சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் அணிகள் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகின்றது.

ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகும் தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள்

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலும் வழமை போன்று 8 அணிகள் பங்கேற்கின்ற இதேவேளை, மொத்தமாக 62 போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னை சுபர் கிங்ஸ்

Image Courtesy – BCCI

7 தடவைகள் ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, மூன்று தடவைகள் வெற்றியாளர்களாக வாகை சூடியிருக்கும் சென்னை சுபர் கிங்ஸ் அணி வழமை போன்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் டோனியினால் இம்முறை வழிநடாத்தப்படுகின்றது.

கடந்த காலங்களில் வீழ்த்துவதற்கு மிக கடினமான அணிகளில் ஒன்றாக இருந்த சென்னை சுபர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் வெற்றியாளர்களாக மாற எதிர்பார்க்கப்படும் ஒரு அணியாகவும் இருக்கின்றது.

சென்னை சுபர் கிங்ஸ் அணியில் மஹேந்திர சிங் டோனியோடு, பாப் டு ப்ளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக பலம் சேர்க்க ட்வேய்ன் ப்ராவோ, ரவிந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோர் பந்துவீச்சில் வலுச்சேர்க்கின்றனர்.

சென்னை சுபர் கிங்ஸ் குழாம் – மஹேந்திர சிங் டோனி (அணித்தலைவர்), சுரேஷ் ரெய்னா, பாப் டு ப்ளெசிஸ், முரளி விஜய், சேம் பில்லிங்ஸ், அம்பதி ராயுடு, துருவ் சோரி,  N. ஜகதீஷன், ருத்துராஜ் கய்க்வாட், ஷேன் வாட்சன், ரவிந்திர ஜடேஜா, ட்வேய்ன் ப்ராவோ, டேவிட் வில்லி, கேதர் ஜாதவ், சய்த்தான்யா பிஷ்னொய், ஹர்பஜன் சிங், கரண் சர்மா, இம்ரான் தாஹிர், மிச்செல் சான்ட்னர், சர்துல் தாக்கூர், தீபக் சாஹர், லுங்கி ன்கிடி, மொஹிட் சர்மா, KM. ஆசிப், மோனு குமார்


றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்

Image Courtesy – BCCI

3 தடவைகள் இறுதிப் போட்டிக்கு தெரிவான போதிலும், ஒரு தடவை கூட சம்பியன் பட்டம் வெற்றி பெறாத றோயல் செலஞ்சர்ஸ் அணி விராட் கோஹ்லி தலைமையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளில் பங்கெடுக்கின்றது.

இந்த ஆண்டுக்கான தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் அணியின் துடுப்பாட்டத்திற்கு விராட் கோஹ்லியுடன் இணைந்து ஏ.பி.டி. வில்லியர்ஸ் பெறுமதி சேர்க்கின்றார்.

முதல் T20I போட்டியில் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட இலங்கை

இதேநேரம் றோயல் செலஞ்சர்ஸ் அணியில் சிறப்பு பந்துவீச்சாளர்களாக யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதேவ் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

றோயல் செலஞ்சர்ஸ் குழாம் – விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ஏ.பி.டி. வில்லியர்ஸ், பார்திவ் பட்டேல், சிம்ரோன் ஹெட்மேயர், டேவ்தட் படிக்கல், ஹென்ரிச் கிளாசேன், ஹிம்மாட் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கஸ் ஸ்டோனிஸ், கொலின் டி கிரான்ட்ஹோமே, மொயின் அலி, பவன் நேகி, வாஷிங்டன் சுந்தர், சிவம் தாபே, மிலிந்த் குமார், குரீகாத் சிங்க் மன், ப்ராயஸ் பர்மான், அக்ஸ்தீப் நாத், உமேஷ் யாதவ், நவ்திப் சய்னி, குல்வாந்த் கேஜ்ரோலியா, டிம் செளத்தி, மொஹமட் சிராஜ், நேதன் கோல்டர்-நைல்

மும்பை இந்தியன்ஸ்

Image Courtesy – BCCI

ஐ.பி.எல். தொடரின் மிக வெற்றிகரமான அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ், இந்த ஆண்டும் ரோஹித் சர்மா அணித் தலைவராக இருக்க களம் காண்கின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் துருப்புச் சீட்டு வீரர்களாக பாண்டியா சகோதரர்கள், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

கடந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்பார்த்த அளவு  ஜொலிக்க தவறியிருந்த போதிலும் இந்த ஆண்டு சிறப்பாக செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மும்பை இந்தியன்ஸ் குழாம் – ரோஹித் சர்மா (அணித்தலைவர்), இஷான் கிஷான், சுர்யகுமார் யாதவ், யுவ்ராஜ் சிங், அன்மோல் பிரித்சிங், அதித்யா தாரே, சித்தேஷ் லாட், ஈவின் லூயிஸ், குயின்டன் டி கொக், ஹர்திக் பாண்டியா, குருனல் பாண்டியா, பங்கஜ் ஜைஷ்வால், அனுகுல் ரோய், கெய்ரன் பொலர்ட், பென் கட்டிங், மயான்க் மார்க்கன்டே, றாகுல் சாஹர், லசித் மாலிங்க, ஜஸ்பிரிட் பும்ரா, மிச்செல் மெக்லெனகன், அடம் மில்னே, ஜேசன் பெஹ்ரேன்ட்ரோப், பரின்தர் ஸ்ரன், ராசிக் சலாம், ஜயந்த் யாதவ்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Image Courtesy – BCCI

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை (24) சன்ரைஸர்ஸ் ஹைதராபத் அணியுடனான போட்டியுடன் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரினை ஆரம்பிக்கின்றது.

இந்த ஆண்டுக்கான தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கடந்த ஆண்டு போன்று தினேஷ் கார்த்திக்கினால் வழிநடாத்தப்பட மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் கார்லோஸ் பரத்வைட்டும் கொல்கத்தா அணிக்கு பெறுமதி சேர்க்கின்றார். அதேநேரம், நியூசிலாந்து வீரரான லோக்கி பெர்குஸனும் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குழாம்

தினேஷ் கார்த்திக் (அணித்தலைவர்), ரொபின் உத்தப்பா, கிரிஸ் லின், சுப்மான் கில், ரிங்கு சிங், நிகில் நாயக், ஜோ டென்லி, சிறிகாந்த் முன்தே, கார்லோஸ் ப்ராத்வைட், அன்ட்ரூ ரஸல், சுனீல் நரைன், நிதிஷ் ரானா, பியூஸ் காவ்லா, குல்தீப் யாதவ், சந்தீப் வாரியர், பிரசித் கிரிஷ்னா, லோக்கி பெர்குஸன், என்ரிச் நொர்ட்ஜே, ஹர்ரி கேர்னி, யாரா ப்ரிதிவிராஜ்

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 69

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இந்தியாவின் முன்னணி சுழல் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மூலம் வழிநடாத்தப்படும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இந்த ஆண்டுக்கான வெற்றியாளர் பட்டம் பெற எதிர்பார்க்கப்படும் ஏனைய அணிகளில் ஒன்றாக இருக்கின்றது.

கடந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் அட்டகாசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில், லோக்கேஷ் ராகுல் ஆகியோர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். அதேநேரம், சுழல் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருக்கின்றார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் குழாம் – ரவிச்சந்திரன் அஷ்வின் (அணித்தலைவர்), லோக்கேஷ் ராகுல், கிறிஸ் கெயில், மயான்க் அகர்வால், கருண் நாயர், டேவிட் மில்லர், மந்தீப் சிங், சிம்ரான் சிங், நிகோலஸ் பூரான், சர்பராஸ் கான், முஜீப் உர் ரஹ்மான், முருகன் அஸ்வின், மொஹமட் சமி, அன்ட்ரூ டை, அங்கித் ராஜ்பூட், ஹர்தஸ் விலிஜோன், அர்ஸ்தீப் சிங்க், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், வருண் சக்கரவர்த்தி, சேம் கர்ரன், தர்ஷன் நல்கன்டே, அக்னிவேஷ் ஆயாச்சி, ஹர்பிரித் ப்ரார்


ராஜஸ்தான் றோயல்ஸ்

Image Courtesy – BCCI

ஐ.பி.எல். போட்டிகள் 2008 ஆம் ஆண்டில் முதல் தடவையாக இடம்பெற்ற போது அதன் வெற்றியாளராக மாறியிருந்த ராஜஸ்தான் றோயல்ஸ் அணி அதன் பின்னர் இடம்பெற்ற தொடர்களில் பெரிதாக சிறப்பான பதிவுகள் எதனையும் வைத்திருக்கவில்லை.

எனினும், இந்த ஆண்டுக்கான தொடரில் இந் நிலைமைகள் மாறி ராஜஸ்தான் றோயல்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான தொடர் மூலம் அவுஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஐ.பி.எல். போட்டிகளில் ஆடவிருக்கின்றார். ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இந்த ஆண்டுக்கான தொடரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஜிங்கியா ரஹானேயினால்  வழிநடாத்தப்படுகின்றது.

ராஜஸ்தான் றோயல்ஸ் குழாம் – அஜிங்கியா ரஹானே (அணித்தலைவர்), ஸடீவ் ஸ்மித், ஜொஸ் பட்லர், சஞ்சு சம்சன், பிரசாந்த் சோப்ரா, மனான் வோரா, அர்யாமன் பிர்லா, ராகுல் த்ரிபதி, பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா அர்ச்சர், ஸ்டுவார்ட் பின்னி, ஸ்ரேயாஸ் கோபால், கிரிஷ்னப்பா கெளதம், சசாங்க் சிங், லியாம் லிவிங்ஸ்டன், சுபாம் ரஞ்சானே, அஸ்டன் டர்னர், றியான் பராக், மஹிபால் லொம்ரோர், இஷ் சோதி, ஜய்தேவ் உனட்கட், தவால் குல்கர்னி, வரோன் ஆரோன், ஒசானே மொமஸ், சுதீஷன் மிதும்


சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்

Image Courtesy – BCCI

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியோடு ஐ.பி.எல். தொடரை ஆரம்பிக்கும் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி பல முக்கிய பந்துவீச்சாளர்களுடன் பலம் பெறுகின்றது. அந்த வகையில்  புவ்னேஸ்வர் குமார், சித்தார்த் கெளல் மற்றும் ராஷீத் கான் ஆகியோர் சன் ரைஸர்ஸ் அணியை பலப்படுத்துகின்றனர்.

இந்து மைந்தர்களின் சமரில் கொழும்பு இந்துக் கல்லூரி வெற்றி

இதேநேரம், கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடாமல் போன அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோனரும் சன் ரைஸர்ஸ் அணிக்கு திரும்பியிருக்கின்றார். கேன் வில்லியம்சனினால் வழிநடாத்தப்படும் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் பலம் வாய்ந்த தரப்புக்களில் ஒன்றாக, இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளில் பங்கெடுக்கின்றது.

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் குழாம் – கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), டேவிட் வோனர், மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, றிக்கி போய், ஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமி, ஜோனி பெயர்ஸ்டோவ், ரித்திமான் சஹா, மார்டின் கப்டில், ராஷித் கான், சபாஷ் நடீம், சஹிப் அல் ஹஸன், யூசுப் பதான், மொஹமட் நபி, அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், புவ்னேஸ்வர் குமார், சித்தார்த் கெளல், பாசில் தம்பி, சந்தீப் சர்மா, பில்லி ஸ்டேன்லக், K. கலீல் அஹமட், T. நடராஜன்


டெல்லி கெபிடல்ஸ்

Image Courtesy – BCCI

டெல்லி கெபிடல்ஸ் அணி முன்னதாக டெல்லி டார்டெவில்ஸ் என்ற பெயருடன் ஐ.பி.எல் தொடர்களில் விளையாடியிருந்தது. இதுவரையில் ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டிகள் எதற்கும் முன்னேறியிருக்காத டெல்லி கெபிடல்ஸ் அணி இந்த ஆண்டில் சிறப்பு பதிவு ஒன்றினை காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெரும்பாலும் இளம் வீரர்களையே கொண்டிருக்கும் டெல்லி கெபிடல்ஸ் அணியினை இம்முறை ஸ்ரேயாஸ் அய்யர் வழிநடாத்துகின்றார். ஸ்ரேயாஸ் அய்யரோடு டெல்லி கெபிடல்ஸ் அணி, சிக்கர் தவான் மற்றும் இசாந்த் சர்மா ஆகிய வீரர்களால் இன்னும் பலம் பெறுகின்றது.

டெல்லி கெபிடல்ஸ் குழாம் – ஸ்ரேயாஸ் அய்யர் (அணித்தலைவர்), சிக்கர் தவான், ஹனுமா விஹாரி, றிசாப் பான்ட், ப்ரித்வி சாஹ், கொலின் மன்ரோ, அன்குஸ் பேய்ன்ஸ், கொலின் இன்ங்ராம், அக்ஷார் பட்டேல், ஹர்சால் பட்டேல், மனோஜ் கல்ரா, கிறிஸ் மோரிஸ், கீமோ போல், செர்பானே ரதர்போர்ட், ஜலாஜ் சக்ஷேனா, அமித் மிஸ்ரா, ராகுல் தேவட்டியா, சந்தீப் லமிச்சானே, ட்ரென்ட் போல்ட், ககிஸோ றபாடா, அவேஷ் கான், இசாந்த் சர்மா, நேத்து சிங்க், பண்டாரு அய்யப்பா

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க